2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்: தனுசு ராசி

Dhanush Rasi Palan
Dhanush Rasi Palan-2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தப்போகிற ஆண்டாக இருக்கும். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டதால் உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். குரு பகவானும் உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய தொழில்களில் லாபம் கிடைக்கும். முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். உங்களின் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். சொத்து விற்பனை மூலம் நல்ல லாபம் கிடைக்கும்..
2023 புத்தாண்டு தனுசு ராசி பொதுப்பலன்:
இந்த ஆண்டு உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். திறமையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். வேலையில் உங்கள் உற்பத்தித்திறன் வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடைபெறும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைப்பேறு கிட்டும். நீங்கள் பிறருக்கு நல்ல ஆலோசனை வழங்குவீர்கள். உங்கள் செயல்களால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் அறிவை மேம்படுத்த கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
குடும்பம்
நீங்கள் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை அனுபவிபீர்கள். உங்கள் துணை தேவைப்படும் நேரங்களில் ஆதரவை வழங்குவார். தாம்பத்திய வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகளில் ஏற்படும், சற்று பொறுமை அவசியம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வீட்டு கடமைகளில் பிஸியாக இருப்பீர்கள். திருமணத்திருக்கு காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல செய்தி வரும்.
பொருளாதார நிலை:
இந்த ஆண்டு நிதி நிலையில் கலவையான பலன்கள் கிட்டும். உங்கள் செலவுகளை கவனமாக திட்டமிடுங்கள். உங்கள் முதலீடுகள் மூலம் சில நிதி நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் முக்கிய செலவு வீட்டுத் தேவைகளுக்காக ஆடம்பரமான பொருட்களை வாங்குவதாக இருக்கும். நண்பர்களுக்கு செலவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தொழில்:
இந்த ஆண்டு அனைத்து பணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும் எந்த ஈகோவையும் தவிர்க்க வேண்டும். கூடுதல் பணிகள் வந்து சேரும், அதனை முடிக்க கூடுதல் நேரம் எடுக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாகவும் சரியாகவும் முடிக்கவும். உங்களுக்கு உதவியாக இருக்கும் சக ஊழியர்களுடன் நட்பாக இருங்கள்..
உடல் ஆரோக்கியம் :
இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் இயல்பாக இருக்கும். அதிக வேலை காரணமாக மன அழுத்தம் மற்றும் அதன் காரணமாக நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். கடுமையான டயட்டைப் பின்பற்றுவது நல்லது. தியானத்தை தவறாமல் பயிற்சி செய்வது, மன அமைதியை மேம்படுத்த உதவியாக இருக்கும். உடல்நலப் பரிசோதனை தேவைப்படலாம்.
மாணவர்களுக்கு:
கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உயர் படிப்பு குறித்த உங்கள் முன்கூட்டிய திட்டமிடல் சிறப்பாக இருக்கும். பிறரை கேட்டு முடிவுகளை எடுப்பதை விட உங்கள் உள்ளுணர்வு கூறுவதை பின்பற்றுங்கள். நீங்கள் பொறுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். உங்களில் ஒரு சிலர் அரசிடமிருந்து பாராட்டு அல்லது விருது பெறலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- New year Rasi Palan 2023
- new year Rasi Palan 2023 in Tamil
- new year Rasi Palan Dhanush Rasi
- Dhanush Rasi Palan
- dhanush rasi palangal
- dhanusu rasi palan today in tamil
- dhanush rasi rasi palan
- thanusu rasi in tamil 2023
- thanusu rasi in tamil 2022
- dhanush rasi palan
- dhanush raasi
- dhansu rasi
- thanush rasi
- dhanush rasi
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu