அபூர்வ அமாவாசை: மே 19 ல் இந்த சடங்குகளை செய்ய மறந்துடாதீங்க..

அபூர்வ அமாவாசை: மே 19 ல் இந்த சடங்குகளை செய்ய மறந்துடாதீங்க..
X

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.

இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வரப்போகும் அபூர்வ அமாவாசை நாளன்று சில சடங்குகளை செய்தால் பலன்கள் கிடைக்கும்.

அமாவாசை என்றாலே விசேஷம் தான் என்றாலும், வருகிற 19 ஆம் தேதி வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது ஆகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விசேஷம் ஆகும்.

இந்த அபூர்வ அமாசாவை குறித்தும், அன்றையதினம் செய்ய வேண்டிய சடங்குகள் குறித்தும் தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கம் இதோ:

இந்து மதத்தில் அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அவற்றில் சில அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது இர இருக்கும் அமாவாசை நாளில் ஒன்றல்ல, மூன்று விசேஷங்கள் வருவதால் ஜயேஷ்ட மாத அமாவாசை மிகவும் விசேஷமானது. சனி ஜெயந்தியும், ஜயேஷ்ட அமாவாசை நாளில் வருகிறது, இந்த நாளில் திருமணமான பெண்கள் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஜயேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

இந்த ஆண்டு ஜ்யேஷ்ட அமாவாசை மே 19 ஆம் தேதி வருகிறது. அதாவது மே 19 ஆம் தேதியே சாவித்திரி விரதம் அனுசரிக்கப்படுவதுடன், சனி ஜெயந்தியும் கொண்டாடப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதமும், சனி பகவான், விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் ஆசியும் கிடைக்கும்.

ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் பாவங்கள் நீங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் கண்டிப்பாகச் தர்ப்பணம் செய்வது, முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஜயேஷ்ட அமாவாசை திதி மே 18, 2023 அன்று இரவு 9.42 மணிக்கு தொடங்கி மே 19, 2023 அன்று இரவு 9.22 மணிக்கு முடிவடையும். உதயதிதியின்படி மே 19 வெள்ளிக்கிழமை ஜ்யேஷ்ட அமாவாசையாகக் கருதப்படுகிறது.

அமாவாசை பரிகார நேரம்:

ஜயேஷ்ட அமாவாசை அன்று நீராடும் நேரம் - காலை 05.15 முதல் மாலை 04.59 வரை

சாவித்திரி பூஜை முஹூர்த்தம் - காலை 05.43 முதல் 08.58 வரை

சனி பகவான் பூஜை முஹூர்த்தம் - மாலை 06.42 முதல் 07.03 வரை

ஜயேஷ்ட அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

ஜயேஷ்ட அமாவாசை நாளில் புனித நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுங்கள். மேலும் சூரியபகவானுக்கு அர்க்யா அர்ச்சனை செய்யவும். அமாவாசை தினத்தன்று பாயும் நீரில் கருப்பு எள்ளைப் விட்டால் பல தொல்லைகள் நீங்கும்.

முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் அமாவாசை நாள் முக்கியமானது. இந்நாளில் குளித்த பின் தானம் செய்யவும். ஜயேஷ்ட அமாவாசை நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக யம தேவதையை வைத்து வழிபட வேண்டும்.

சனி தேவன் ஜயேஷ்ட அமாவாசை அன்று பிறந்தார். சனி ஜெயந்தி அன்று சனிதேவருக்கு நல்லெண்ணைய் கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல நிற மலர்களை சமர்பிக்கவும். சனி காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும். சனிஸ்வர மூலமந்திரமான ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ என 1008 முறை உச்சரிக்கவும் என சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture