ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி விழா நாளை துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி விழா நாளை துவக்கம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (கோப்பு படம்).

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி விழா நாளை துவங்கி 23ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதும் துர்கா பூஜை எனப்படும் நவராத்திரி விழா இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது.

அந்த வகையில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்க நாச்சியார் நவராத்திரி உற்சவம் அக்டோபர் 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபர் 23ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த உற்சவத்தின் முதல் நாள் அன்று பகல் 1:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை மூலஸ்தானத்தில் ரங்க நாச்சியார் திருமஞ்சனம் கண்டருள்கிறார். பின்னர் மாலை ஆறு முப்பது மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7 .45 மணிக்கு தொடங்கி இரவு 8 .45 மணி வரை நடைபெறும். இரவு 9:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.

இரண்டாம் திருநாள் முதல் ஆறாம் திருநாளான இருபதாம் தேதி மற்றும் எட்டாம் திருநாளான 22ஆம் தேதி ஆகிய நாட்களில் ரங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை ஐந்து முப்பது மணிக்கு புறப்பட்டு கொலுமண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம் திருநாளான 21ஆம் தேதி அன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான 23ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணையான மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா