ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு

ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு
X

ரமலான் நோன்பு 

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளார்

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று(மார்ச் 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோன்பு நோற்கும் இஸ்லாமியா்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வோர் ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போன்றே, இந்த ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டுமென இஸ்லாமியா்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2024-ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலமாக பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.26.81 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story