நம் வாழ்க்கையை ஒளிமயமாக்க சிவபெருமான் அருளிய பொன்மொழிகளை பார்க்கலாம் வாங்க positive lord Shiva quotes in Tamil
Anbe Sivam Quotes in Tamil
Anbe Sivam Quotes in Tamil
சிவன் என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.
சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை(ஆணவம்,கன்மம்,மாயை) போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கைய உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார்
சிவன் என்பது உணர்வின் உச்சம். சிவனின் ஒரு கூறு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறட்டும். அவர் எல்லாம் மற்றும் எல்லாம். அவர்தான் பிரபஞ்சம்.
இந்த பதிவில் சிவனின் பொன்மொழிகளை உங்களுக்காக தருகிறோம்
தெய்வீகத்தின் விதைகள் அனைவருக்கும் வாழ்கின்றன. ஓம் நம சிவய மந்திரத்தை உச்சரிப்பது அந்த தெய்வீகத்தை முளைக்கும் கலை.
சிவன் என்ற சொல்லுக்கு மரணமில்லாத, மாறாத, காலமற்ற, உருவமற்ற, பிரபஞ்சத்தின் முழுமையான சாரம் என்று பொருள்.
சிவனைப் புரிந்து கொள்ளுங்கள், அவரது மௌனத்திற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன!
நீங்கள் விரும்பும் எந்தவொரு முடிவையும் எடுக்க நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள், ஆனால் அந்த முடிவுகளின் விளைவுகளிலிருந்து நீங்கள் விடுபடவில்லை.
மக்களுக்கு நல்லது செய்யும் செயல்களைச் செய்ய சிவன் உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் அவரை நம்பி பாதையை பின்பற்றும்போது சிவன் உங்கள் பக்கமாக இருப்பார்.
வாழ்க்கையை முழுமையாக வாழ சுய கட்டுப்பாடு முக்கியம். உங்கள் சொந்த மனதில் நுழைந்தால் மட்டுமே நீங்கள் அமைதியைக் கண்டுபிடிக்க முடியும்.
வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்றும் இல்லை. மற்றவை அனைத்தும் நீயாக உருவாக்கிக்கொண்ட மாயை. அவை இன்பம் தரும் என்று ஏமாறாதே.. சிவாய நம ஓம்
தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!
நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு
மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய
மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும். ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்
நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார். பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!
நீ உன் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு ஓடாதே இறைவனோடு சேர்ந்து நில் வெற்றி உனக்கே.!
நீ பக்தி செய்வாயானால் எனதருகே நீ வருவாய்,
தொண்டு செய்வாயானால் நான் உன்னருகே வருவேன்
ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகின்றாய். ஜீவனே சிவனாம், அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்.
பிரார்த்தனை செய் கடவுளிடம் செல்லலாம், தர்மம் செய் கடவுள் உன்னிடம் வருவார்
நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் துணை இல்லை என்று கலங்காதே. உனக்காக ஏதோ ஒரு உருவில் உன்னுடன் துணையாக நான் வருவேன்
அன்பே சிவம், நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படதே இது உன் வாழ்க்கை.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
- திருவாசகம்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu