அயோத்தி ராமர் கோயில் எப்போ திறக்கப்படும் தெரியுமா?
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான ராமர் கோவிலில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா நடைபெறும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அயோத்தி கோவில் அறக்கட்டளை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று பிரதமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான சம்மதத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டுடன் மோடி தலைமையிலான ஆட்சி 10 வருடங்களை நிறைவு செய்யவுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு 9 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அதற்காக சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய உபி முதல்வர் ஆதித்யநாத், அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும், அதில் பாஜக எம்பிக்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.
அயோத்தி நகரம் ராம ராஜ்யத்தை நோக்கி செல்வது மட்டுமின்றி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை இந்தியா முழுக்க உற்சாகத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது என்று தெரிவித்த அவர், ராமர் கோவிலில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பார்வையிட்டு வருவதாக தெரிவித்தார். அடுத்து 6 மாதங்களில் அயோத்தி சாலைகள் மிகப் பெரிய அளவில் மாற்றம் பெறும். டெல்லி ராஜபாதையுடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கும்.
அயோத்தியின் முக்கிய சாலைகளிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் சாலையை பக்தி சாலை, ராமர் பாதை என்று பெயரிட்டுள்ளோம். வரும் ஜனவரி மாதம் இந்த கோவில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆதித்யநாத்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu