பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யலாமா?

Peyar Porutham For Marriage in Tamil
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அந்த வகையில் திருமணம் செய்வதற்கு முன்னர் மாப்பிள்ளை, பெண் ஆகியோரின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். மொத்தம் உள்ள 10 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகிறது என பார்ப்பார்கள். ஒரு சிலர் பெயர் பொருத்தத்தினை மட்டும் பார்ப்பது உண்டு. அவரவர்களின் வழக்கத்திற்கேற்ப இதனை நடைமுறைப்படுத்துவதும் உண்டு.
பெயர் பொருத்தம் வைத்து திருமணம் செய்வது அந்த அளவிற்கு ஏற்றதாக இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. காரணம் ஒருவரின் பெயரின் முதல்எழுத்தோடு , பெண்ணின் முதல் எழுத்தினை வைத்து பார்ப்பது ஆகும். மேலும் இருவரின் நட்சத்திரத்தினையும் வைத்து பார்ப்பார்கள். உண்மையில் ஒருவர் பெயரோடு அவரின் நட்சத்திரத்திற்கு தொடர்புள்ளதா என்பதை நம்மால் எளிதில் அறியமுடியாது.
இக்காலத்தில் குழந்தை பிறந்த பின்பு பெயர் வைக்கும்போது ஒரு சிலர் ராசியை வைத்து பெயர் வைக்கிறார்கள். அதாவது இந்த ராசியில் பிறந்திருந்தால் அதற்குரிய எழுத்துகளின் முதல் எழுத்தாக வைத்து பெயர் வைக்கின்றனர். ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அதற்கான எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து பெயர் வைத்தனர். மேலும் குல தெய்வ சாமியின் பெயரையோ அல்லது நியூமராலஜி முறையிலோ பெயர் வைப்பதை வழக்கமாகி கொண்டுள்ளனர். இதனால் பெயருக்கும் நட்சத்திரத்திற்கும் தொடர்பற்றதாகிவிடுகிறது.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்துக்கு வெங்கடாசலபதி தான் குலதெய்வம் என்றால் அவருக்கு நாராயணன் என பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் அவருடைய நட்சத்திரத்திற்கும் பெயருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் பொருத்தம் பார்த்து எப்படி திருமணம் செய்வது?
எனவே பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது என்பது ஏற்க முடியாததாகிவிடுகிறது. ஒரு வேளை ஜாதகம் இல்லாவிட்டலும் உரிய ஜோசியரை கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது கூட நல்லதாகிவிடும். ஆனால் பெயர் பொருத்தம் பார்ப்பது என்பது இக்கால நடைமுறைக்கு ஏற்றதல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது. -
திருமணப் பொருத்தம் என்பது இருவரின் ஜாதகத்தினையும் வைத்து பொருத்தம் பார்க்க வேண்டும். கிரக அமைப்புகளால் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க வேண்டும். பின்பு இருவருக்கும் உள்ள பொருத்தம் எப்படி உள்ளது? குழந்தை பாக்கியம் உண்டா? என்பதையெல்லாம் பார்த்துதான் திருமணம் செய்யவேண்டும். பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வது என்பது பல பிரச்னைகளை கொண்டு வரும் .
.நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து பெயர் வைத்தால் மட்டும் நம் விதி மாறிவிடுமா என்றால் இல்லை. நம் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலையைப் பொருத்து தான் எதுவும் அமையும்.
இருப்பினும் நாம் பெயர் வைக்கும் போது நேர்மறை ஆற்றலை உருவாக்கக் கூடிய சப்தத்தை எழுப்பக் கூடியதான பெயர்களை வைப்பது நல்லது. இதனால் அந்த பெயருக்கு சக்தி ஏற்படும்.
பெயரின் படி ஜாதக பொருத்தம் என்பது நட்சத்திரத்தின் கூட்டங்களின் படி ஆண் மற்றும்பெண் இருவரின் குணங்களையும் பொருத்துவதாகும். இதில் இருவரின் பெயர்களாலும், அவர்களின் குணங்கள் எத்தனை பெறுகின்றன மற்றும் அவர்களின் திருமணம் எவ்வாறு செய்யப்படும் என்பதாலும் இது கண்டறியப்படுகிறது. கணக்கீட்டின்படி 36 குணங்களைப் பெறுவது திருமணத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகிறது.

ஒரு நபர் ஜாதகத்தை பெயருடன் பொருத்தும்போது சில சூழ்நிலைகளில் செய்யப்படும் கணக்கீடு முற்றிலும் சரியானதல்ல. இதுபோன்ற நேரங்களில் இரண்டு சூழல் உருவாகும். முதலில் பிறந்த நேரத்தினை கணக்கிடுவதன்மூலம் உங்கள் பெயர் கணக்கிடப்பட்டது மற்றும்இரண்டாவதாக அந்த நேரத்தில் நீங்கள் இதே போன்று பிடித்த பெயரைக் கொண்டிருப்பீர்கள்.
அக்காலத்தில் ஒருவரின் வீட்டில் குழந்தை பிறந்தால் குடும்ப ஜோதிடம் அல்லது பண்டிதர் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையுடன் குழந்தைக்கு பெயரிட்டார். ஜோதிடம் குழந்தையின் பெயரின் முதல் எழுத்தை பிறந்த நேரத்திற்கு ஏற்ப சொல்லும். ஆனால் இன்றைய நவீன காலங்களில் எந்த ஜோதிட கணக்கீடும் இல்லாமல் குழந்தை பிறப்பதற்கு முன்பே மக்கள் பெயரை நினைக்கின்றனர். ஜோதிட பார்வையின் படி சரியானதல்ல. இத்தகைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் இந்த பெயரிலிருந்து பெறப்பட்ட ஜாதக பொருத்தம் ஜோதிடம் பரிந்துரைத்த பெயரைப்போல துல்லியமாகவும் மற்றும் உறுதியானதாகவும்இல்லை என்பது தெளிவாகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu