/* */

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
X

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 4-ந்தேதி தொடங்கியது. அன்று முதல், நேற்று வரை பகல், உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமாளுக்கு, மோகினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின், சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து காலை 6 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 13 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு