/* */

பங்குனி உற்சவ திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

பங்குனி உத்திர உற்சவ திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

பங்குனி உற்சவ திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
X

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

மேலும், தமிழ் மாதம் தோறும் முதல் ஐந்து நாட்கள் கோயில் நடை திறக்கப்படுவது உண்டு. இதுதவிர, சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர உற்சவ திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாளில் ஆராட்டுடன் விழா நடைபெறும்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திர உற்சவ திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று வேறு பூஜைகள் ஏதும் கிடையாது.


தொடர்ந்து, நாளை காலை கோயில் நடை திறக்கப்பட்ட பிறகு, கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கொடியேற்றி வைப்பார். அதன் மூலம் பங்குனி உத்திர உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்10 நாட்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 5 ஆம் தேதி பம்பையில் நடைபெறும் ஆராட்டு நிகழ்வுடன் பங்குனி உத்திர உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது. தொடர்ந்து, அன்றையதினம் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 March 2023 1:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!