பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா ஜனவரி 12-ம் தேதி தொடக்கம்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா ஜனவரி 12-ம் தேதி தொடக்கம்
X
புகழ்பெற்ற, பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா, ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா, வருகிற 12-ம் தேதி காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து 17-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளிரதமும் நடைபெறுகிறது.

மேலும் 18 -ந்தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.45 மணிக்கு திருத்தேரோட்டம், 24-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேரும் நடக்கிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை கழுவ கிருமி நாசினி, முகக் கவசம் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!