காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 12 உண்டியல் திறந்து எண்ணும் பணி
காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மூன்று மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் கொடிமரம்,மூலஸ்தானம் மற்றும் பிற சன்னதிகள் என கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள 12உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்றதும், பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாகவும் விளங்கின்ற ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இத்திருக்கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்துவருகிறது.
இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடக, கேரளா,பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில மற்றும் வெளிநாடு என ஆயிரகணக்கான பக்தர்கள் வருகைப் புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்கள் காணிக்கையாகவும், நேர்த்தி கடன்களையும் செலுத்துவது வழக்கம். இதற்கென இந்துசமய அறைநிலத்துறையின் சார்பில் கோவில் கொடிமரம்,மூலஸ்தானம் மற்றும் பிற சன்னதிகள் மற்றும் திருப்பணி உண்டியல் என 12உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்,அவ்வகையில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 12உண்டியல்களும் திறக்கப்பட்டு கோவில் கொடி மரம் அருகே எண்ணும் பணியானது நடைபெற்றது வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள்,கோவில் பணியாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு உண்டியல்களிலிருந்தும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எடுத்து அதனை 1ரூபாய்,2ரூபாய்,5ரூபாய் காசுகளையும், அதேபோல் 10ரூ,20ரூ,50ரூ,100ரூ,200ரூ, 500ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக பிரித்து அதனை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய தங்கம்,வெள்ளி போன்ற பொருட்களையும் சேகரித்து அதனை எடையிட்டு வருகின்றனர்.
இன்று இரவுக்கும் மேல் பெறப்பட்ட காணிக்கைகள் தொடர்பான தகவல்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu