/* */

புத்திர பாக்கியம் இல்லையா? முதலில் இதை தவறாமல் செய்யுங்கள்...

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

புத்திர பாக்கியம் இல்லையா? முதலில் இதை தவறாமல் செய்யுங்கள்...
X

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.

நாம் ஒவ்வொருவரும் வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீண்ட ஆயுள் என்ற ஆசை கொண்டவர்களாகவே இருப்போம். அப்படி இருக்கையில், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் எப்போதும் ஒருவித ஏக்கத்துடனேயே இருப்பார்கள். புத்திரப் பாக்கியம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

சுகபோக வாழ்க்கையை பல கிரகங்கள் தந்தாலும், எல்லாவற்றுக்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு மட்டுமே உண்டு. ஜோதிட ரீதியாக சுக்கிரன்தான் சுகபோகங்களுக்கு அதிபதி. திருமண பாக்கியத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல்,இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி.

தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிரன் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார். களத்திரகாரகன் சுக்கிரன். என்னதான் குருவை புத்திரகாரகன் என்று குறிப்பிட்டாலும், புத்திர பாக்கியத்துக்குக் காரணமாக இருப்பவர் சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லறவாழ்வுக்குரியவர்.

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் யோக பலன்கள்:

ஜாதகத்தில் வலுப்பெற்ற சுக்கிரன் (சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்ற நிலை) கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர். காதல், தாம்பத்யம்ஆகியவற்றைத் திருமணத்தின் வாயிலாக ஆணுகளுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மை, அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி,அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதி, சுகபோகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.

மாட மாளிகையில் வாழ்க்கை நடத்தும் பாக்கியத்தை இரு பாலருக்கும் அளிப்பவர். தனம், குடும்பம், திருமண விஷயங்களுக்கு இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். சுக்கிரன் நமது ஜாதகக் கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்றுஇருந்தால், நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

சுக்கிர தசை காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே வேளையில், ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றோ 6, 8, 12ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலோ, பாப கிரகச் சேர்க்கை பெற்றுப் பலம் குறைந்து இருந்தாலோ எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால்அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவக் குறைவு, அவமரியாதை, என்று கெடுபலன்கள் ஏற்படும்.

சுகங்களைத் தரும் சுக்கிரன் :

சுக்கிரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிறஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம்ஏற்படுத்துவார்.

வாசனை திரவியங்களால் சுகானுபவம் அளிப்பவார். கவியின்பம், காவிய இன்பம் தருவார். கற்பனை வளத்தால் மாபெரும் இன்பம் தருவார். நடனக்கலைஞர்களை, நாடகக் கலைஞர்களைத் தோற்றுவிப்பார். திரைப்படத்துறைக்கும் இவர்தான் ஆதாரம்.

இந்திரியங்களைக் காப்பவர். பாலியல் நோய்கள், கர்ப்பப்பைக் கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, ரத்த சோகை, தோல் நோய்,கருப்பை நோய்கள், கருக்கலைப்பு ஆகியவற்றுக்கும் சுக்கிரன் காரணமாகிறார்.

அதனால்தான், காலபுருஷனின் ஏழாம் வீடான சுக்கிரன் ஆட்சி பெறும் துலாம் ராசியைக் களத்திர ஸ்தானத்துக்குக் கொடுத்து அடிவயிறு கருப்பை மற்றும் சுக்கிலம் ஆகியவற்றுக்கும் காரகனாக அமைந்தது.

சுக்கிரன் + கேது இணைவு:

கேது சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9 ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்குச் சுக்கிரன் என்றகிரகம் ஜாதகரின் மனைவியைக் குறிப்பது. இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி விரக்தி மனப்பான்மையுடன் இருப்பார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு ?. உடையவராக இருப்பார். மனைவிஅடிக்கடி நோய்வாய்ப்படுவார். மனைவியுடன் கருத்துவேடுபாடு அதிகம் இருக்கும். ஜாதகர் பெண்ணாக இருந்தால், கர்ப்பப்பைக் கோளாறுகள் ஏற்படும். இதனால் புத்திர பாக்கியம் தள்ளிப்போகும்.

ஜாதகருக்குப் பொருளாதாரத் தடைகளும் அதிகம் இருக்கும். இத்தகைய ஜாதக அமைப்புள்ளவர்கள் பிரத்தியங்கிராதேவி வாராஹி இருவருக்கும் 9 வாரம் தேங்காயில் சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2023 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு