திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம்-இன்று பூமி பூஜை
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம்
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் 62 ஏக்கரில் கட்டப்படவிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலய பூமிபூஜை இன்று நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுவதற்காக 62.02 ஏக்கர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் நிர்வாக கவுன்சில் ஒதுக்கியது. இதன் மூலம் அமர்நாத், வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அடுத்தபடியாக மிக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறும் என்று ஆந்திர அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஒதுக்கபட்ட நிலத்தில் கோவிலுடன் வேத பாடசாலை, பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், தியான மையங்கள், குடியிருப்பு வளாகங்கள், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்கள் ஆகியவற்றை அமைத்து நாற்பது ஆண்டுகள் பயன்படுத்தி கொள்வதற்கான குத்தகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வளாகத்தில் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஆன்மிக சுற்றுலா பிரபலமாகும். மேலும் பொருளாதார ரீதியாக இப்பகுதி மேம்படும் எனவும் ஆந்திரா செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
முதற்கட்டமாக கோயிலைக் கட்டுவதற்கு இதற்காக பக்தர்களிடம் நிதி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டு அத்துடன் திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோயிலை முழுப் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்று ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலய பூமிபூஜை நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற உள்ளதால் அங்குள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu