இன்று அமாவாசை..!வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
இன்று அமாவாசை
இன்று அமாவாசை..!வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
ஆற்றங்கரை, கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்தார்.
வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
இந்து தர்மத்தின்படி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு (முன்னோர்கள்) தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
புதுவை மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது பிரசித்தி பெற்றதாகும்.
இதேபோல் புதுவை கடற்கரையிலும் ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கோவில்களில் திருவிழா நடத்தவும் தடை உள்ளது. இன்று அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதனால் முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் செய்வது குறித்து திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் சரவணன் குருக்கள் கூறியதாவது:-
ஆற்றங்கரை, கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க தடை செய்தது துரதிர்ஷ்டவசமானது. தர்ப்பணம் கடமையை செய்ய நினைப்பவர்கள் எளிமையாக அவர்களது வீட்டிலேயே இருந்தபடியே செய்யலாம். பின் வீட்டில் வடக்கு முகமாக தீபம் ஏற்றி, முன்னோர்களை மனதில் நினைத்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, 'ஓம் பித்ரு கணாய வித்மஹே, ஜகத தாரினி தீமஹி... தன்னோ பித்ரு ப்ரஜோதயது' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யவேண்டும். பின்னர் எள் சாதம் செய்து காகத்திற்கு உணவு அளித்தால் அந்த கடமை நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu