அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பழங்கள் மட்டுமே உண்ண போகும் மோடி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பழங்கள் மட்டுமே உண்ண போகும் மோடி
பிரதமர் மோடி.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பழங்கள் மட்டுமே உண்ண போகிறார் பிரதமர் மோடி.

அயோத்தி ராமர் கோவிலுக்காக பிரதமர் மோடி விரதம் இருந்து வருகிறார். ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி தனது 11 நாள் விரத காலத்தில் எந்த வகையான உணவு எடுத்து கொள்கிறார். இரவில் தூங்குவது எப்படி? என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமர் பிறந்த இடம் என கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டுவது என்பது பா.ஜ.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்து வந்தது. நடைபெற உள்ள நாடாளுமன் தேர்தலுக்கு முன்பாக தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு பணிகள் தொடங்கியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி தான் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டிடக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான வி.வி.ஐ.பி.க்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் ஜனவரி 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதையடுத்து அவர் 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மற்றும் ஆடியோ மெசேஜில் கூறியிருந்தார். அதில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ம் தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. வாழ்வில் முதல் முறையாக தனித்துவமான உணர்வு, தெய்வீக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறை கனவு. அதை நிறைவேற்றுவதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் தெய்வீக உணர்வைஎழுப்ப வேண்டும். ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள், விதிகளை வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதன்படி 11 நாட்கள் விரதத்தை தொடங்குகிறேன் என தெரிவித்து இருந்தார். அதன்படி பிரதமர் மோடி விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். பிரதமர் மோடி யாம விதிகளை பின்பற்றி விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி வரும் நாட்களில் இன்னும் தனது விரதத்தை தீவிரமாக்க உள்ளார். அதாவது கும்பாபிசேகத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சொகுசு படுக்கையில் தூங்காமல் இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாறாக அவர் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்க உள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த 3 நாட்களும் பிரதமர் மோடி பழங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்ள உள்ளார். இந்த நாட்களில் அவர் சில மந்திரங்களையும் உச்சரிக்க உள்ளார். மேலும் கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story