பக்தர்களைக் காத்தருளும் மதுரை மீனாட்சியம்மன்....

பக்தர்களைக் காத்தருளும்    மதுரை மீனாட்சியம்மன்....
X

மதுரை மக்களைக் காத்து வரும் அம்மன்  மீனாட்சிஅம்மன்  (பைல்படம்)

Meenakshi Amman Temple History in Tamil -பாண்டியர்களின் ஆண்ட மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சிஅம்மன்கோயிலானது உள்ளது. இதன் பெருமையை அவ்வளவு எளிதில் யாரும் சொல்லிவிட முடியாது...

meenakshi amman temple history in tamil



மதுரைக்கே அழகு சேர்க்கும் நான்கு வீதி கோபுரங்கள்

meenakshi amman temple history in tamil

பாண்டியர்கள் ஆண்ட நாடான மதுரைமாநகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலானது உலகப் புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனாலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர்களாக சுந்தரேசுவரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்)

தாயார்: மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள்).இக்கோயிலின் தலவிருட்சமாக கடம்ப மரம்உள்ளது.இக்கோயிலின் தீர்த்தங்களாக பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி ஆகியவைகள் உள்ளது. இக்கோயிலின் ஆகமமாக காரண ஆகமம்உள்ளது.சித்திரைமாதந்தோறும் சிறப்பு திருவிழாவாக சித்திரைத்திருவிழாவானது இக்கோயிலில் விமர்சையாக நடக்கும். தேவாரம் பாடிய திருத்தலமாக இக்கோயில் உள்ளது.இதனை பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளதுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் .தமிழகத்தில் மதுரை கோயில்ந கரம் எனவும்,துாங்கா நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. மதுரையின் மத்தியில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவபெருமான் வீற்றுள்ளார். இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் . மதுரை மாநகரில் இக்கோயில் அமைந்திருப்பதால் இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் என உலகெங்கும் பெயர் அழைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மனே தமிழகத்திலுள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயில்களாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூஜையானது அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

சிதம்பரம், காசி, காளஹஸ்தி வரிசையில் முக்கியமான 4 வது தலமாக திருவாலவாய் உள்ளது. இந்த நகரமானது அக்காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டு வந்துள்ளது.தலத்தின் பெயரைக் கேட்டாலே பேரின்ப நிலையானது கிடைத்துவிடும். சிவனுடைய முக்தி தலமாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இதனை சிவன்முக்திபுரம் எனவும் அழைக்கின்றனர். இத்தலமான அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக திகழ்கிறது.மேலும் இதனை ராசமாதங்கி சியாமள பீடம் என அழைக்கின்றனர்.18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர்பீடமாகவும் உள்ளது.விநாயகரின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயமாகவும்,192 வது தேவாரத்தலமாகவும் உள்ளது. பாண்டிய நாட்டுதலங்களில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில்இத்தலமும் ஒன்றாகும். தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. ராமர், லட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இக்கோயில் வழிபடப்பட்டுள்ளது.இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

meenakshi amman temple history in tamil

2500 வருட பழமை

தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இக்கோயிலானது 2500வருடங்கள் பழமையானது என்பதை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் உள்ளன.மேலும் மதுரை மாநகரினை திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

திருப்பாற்கடலைத் கடைந்த போது, நாகம் உமிழ்ந்த விஷத்தை, இறைவன் 'மதுரம்' (அமிழ்தம்/தேன்) ஆக்கினமையால், இத்தலம் 'மதுரை' என்று பெயர் பெற்றதென்பர்.மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாகக் கூடி, மதுரையைக் காத்ததால் 'நான்மாடக்கூடல்' என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு, வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு, இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், 'ஆலவாய்' என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

தலவரலாறு

உலகம் முழுக்க பிரசித்தபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அழகே கோபுரங்கள்தான். இந்த உயர் கோபுரங்கள் மதுரை மாநகருக்குஅழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

meenakshi amman temple history in tamil

விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மூலவர்

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், 'இந்திர விமானம்' என்று அழைக்கப்படுகிறது.

அம்பாள் சன்னிதி

இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மனாவார் இவரது விக்கிரகம், மரகதக் கல் பச்சைக்கல்லால் ஆனது.அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது.

meenakshi amman temple history in tamil


meenakshi amman temple history in tamil

கட்டிடக்கலைக்கு சான்றான மண்டபங்கள்

. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிஷேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும்.

அட்டசத்தி மண்டபம்,மீனாட்சி நாயக்கர் மண்டபம்,முதலி மண்டபம்,ஊஞ்சல் மண்டபம்,கம்பத்தடி மண்டபம்,கிளிக்கூட்டு மண்டபம்,மங்கையர்க்கரசி மண்டபம்,சேர்வைக்காரர் மண்டபம்,திருக்கல்யாண மண்டபம்,ஆயிரங்கால் மண்டபம்வீரவசந்தராயர் மண்டபம்அட்டசத்தி மண்டபம்மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டுசக்தி (அட்டசத்தி) மண்டபம் அமைந்துள்ளது.

meenakshi amman temple history in tamil


meenakshi amman temple history in tamil திருக்கல்யாண வைபவம் -விசேஷம்:

தமிழ்நாட்டில், பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒருமுறை, விருத்திராசூரன், விசுவரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால், இந்திரனை பிரம்மகத்தி தோ*ம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட, தன் குருவை நாடி, உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம், பூலோகம் சென்று பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டால், ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி, இந்திரன், காசி முதலிய பல தலங்களில் வழிபட்டு, தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில், கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன், தன்னைப் பற்றியிருந்த தோசம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய, அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான், திருஆலவாய் சோமசுந்தரராக அவனுக்குக் காட்சி கொடுத்தார். இந்திரன், சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து, தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு, இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம், ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில், 'என்னை இங்கு வந்து வழிபடுக' என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும், சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ரா பௌர்ணமி, மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதே சித்ரா பௌர்ணமி நாளில், மதுரை வைகை ஆற்றில், 'கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு', காலை சுமார் ஏழு மணிக்கு முன், மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து, சுமார் ஒரு இலட்சம் மக்கள் இதைக் காண இங்கு கூடுகின்றனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா தேவேந்திர பூசையுடன் நிறைவு பெறுகிறது.உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!