/* */

சபரிமலையில் இன்று மகரஜோதி, குவியும் பக்தர்கள்

சபரிமலையில் மகரவிளக்கின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

சபரிமலையில் இன்று மகரஜோதி, குவியும் பக்தர்கள்
X

சபரிமலை ஐயப்பன் மகரஜோதி - கோப்புப்படம் 

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இந்த ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம் 27ம் தேதி நடந்து முடிந்தது.

பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30ம் தேதி மீண்டும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையை போன்றே மகர விளக்கு காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் இன்று (திங்கட்கிழமை) மாலையில் நடக்கிறது. இதனையொட்டி கடந்த இரு நாட்கள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்திகிரியை பூஜை நடந்தது.

முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்ணியாகம், ரக்சா கலச பூஜை, 2-வது நாளான நேற்று சது சுத்தி, தார, பஞ்சகம் பூஜையும் நடந்தது.

மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள்.

அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அந்த சமயத்தில் அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்புவார்கள்.

மகர ஜோதி நாளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு முறையில் குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 2 நாட்களுக்கு முன்பிருந்தே சபரிமலையின் நாலாபுறமும் ஆங்காங்கே கூடாரம் அமைத்து பக்தர்கள் தங்கி வருகின்றனர். அந்த வகையில் பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர். எனவே லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண குவிந்துள்ளனர்.

Updated On: 19 Jan 2024 5:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்