இந்த வருட மகா சிவராத்திரி தேதி, நேரம் குறித்த தகவல்கள்

இந்த வருட மகா சிவராத்திரி தேதி, நேரம் குறித்த தகவல்கள்
X

காட்சி படம் 

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி இந்த வருடம் மார்ச் 1 அன்று கொண்டாடப்படுகிறது

மகா சிவராத்திரி இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும். இந்த பூஜையை முதல் காலம், இரண்டாம் காலம் மூன்றாம் காலம் வரை, நான்காம் காலம் என நான்கு காலங்களாக பிரித்திருப்பார்கள்.

இந்த ஆண்டு, மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்குகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது. மகா சிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான நேரம்:

முதல் கால பூஜை:

மார்ச் 1ஆம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

இரண்டாம் கால பூஜை:

மார்ச் 1ஆம் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

மூன்றாம் கால பூஜை:

மார்ச் 2ஆம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

நான்காம் கால பூஜை:

மார்ச் 2ஆம் காலை 3:39 முதல் 6:45 வரை


விரதத்தின் போது செய்ய வேண்டியவை:

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலை குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நண்பகல், மாலை என மூன்று வேளையும் குளித்து நம் உடல் மற்றும் மன தூய்மையுடன் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

இரவில் சிவனுக்கு நடக்கும் நான்கு கால பூஜைகளுக்கு தேவையான பொருட்களில், நம்மால் முடிந்த அபிஷேக, அலங்கார பொருட்களை வாங்கி சிவாலங்களுக்கு வழங்கலாம்.

சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அதோடு நடராஜர் பத்து, பரமசிவ ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். திருமந்திரம் படித்தலும், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் மிக நல்லது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil