நத்தம் அருகே மணக்காட்டூர் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்
மணக்காட்டூர் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நத்தம் அருகே மணக்காட்டூர் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூர் கிராமத்தில் பாலமுருகன், பால விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன் மஹாகும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் கலசங்களில் புனித நதிகளின் புனிதநீர் கொண்டு வரப்பட்டு தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி வலம் வருதல், நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், திருக்குடத்துக்குள் எழுந்தருள செய்தல்,வேள்விச்சாலையில் நுழைதல் முதற்காலயாக வேள்விகள், கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி பிரசாதம் வழங்குதல், ஸ்ரீருத்ர ஜெயம், வேத பாராயணம், சுக்ரஹோரையில் கோபுர கலசங்கள் ஸ்தாபித்தல், தொடர்ந்து பால விநாயகர், பாலமுருகனுக்கு 4ம் காலயாக வேள்விகள் தொடங்கியது. ருத்ரஜெயம் வேத பாராயணம், கோபூஜை, சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுகபூஜை, தொட்டு துலக்குதல்,உயர் ஊட்டுதல் பூஜைகள் நடைபெற்றது.
இன்று பூர்ணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அய்யனார் அருவி, அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.
இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரெத்தினகுமார், பழனிச்சாமி, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரசெயலாளர் ராஜ்மோகன், குடகிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிஅழகர்சாமி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மணக்காட்டூர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu