ஆன்மீகத்தை அழிக்க முடியாது: காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் பேட்டி

ஆன்மீகத்தை அழிக்க முடியாது: காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் பேட்டி
X

மதுரை ஆதீனம்.

திராவிட கட்சியினருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் அதை அழிக்கமுடியாது என காஞ்சிபுரத்தில் மதுரை ஆதினம் பேட்டி அளித்தார்.

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கடந்த 3 நாட்களுக்கு முன்பு, மதுரை ஆதீனம் காஞ்சிபுரம் நகருக்கு வருகை புரிந்தார். காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், இன்று மீண்டும் மதுரை திரும்பும் நிலையில் பிள்ளையார் பாளையம் பகுதியில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதன்பின் பேசிய அவர், ஆன்மிகத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. தற்போது திராவிடக் கட்சியினர் விழுந்து விழுந்து ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டு அதில் நம்பிக்கை கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களை தொட்டவர்கள் ஒருபோதும் நிலைத்து நின்றதில்லை என்பதற்கு உக்ரைன் ஒரு உதாரணம் .

கடந்த காலங்களில் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக உக்ரைன் செயல்பட்டது; தற்போது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கி உள்ளது. இந்தியா ஆன்மீக பூமி. சமாதானத்தையே நாடும் என்பதற்கு உக்ரைன் போரின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி