தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தென் தமிழகத்தில் பழமையானதும், பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதுமான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி விழா

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தென் தமிழகத்தில் பழமையானதும், பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதுமான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலையில் காசி விசுவநாத சுவாமிக்கும், உலகம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழா வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings