முழு முதற் கடவுள் சிவனைப் பற்றிய பொன்மொழிகளை தெரிஞ்சுக்கோங்க....

Lord Shiva Quotes in Tamil
X

Lord Shiva Quotes in Tamil

Lord Shiva Quotes in Tamil-இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். இந்து சமயத்தில் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெருமைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவரைப் போற்றும் பொன்மொழிகள் இதோ படிச்சு பாருங்க..

Lord Shiva Quotes in Tamil-சிவனை நம்புவோருக்கு எந்த அபாயமும் இல்லை. சிவ சிவ என உன் உதடுகள் உச்சரிக்கும்போது உன் அருகில் நான் இருப்பேன். என எந்த அபாயத்திற்கும் நம் காவலனாக விளங்குபவர் சிவபெருமான்.சிவ... சிவ... சிவ...

ஓம் நமசிவாய,,, ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய...

ஓம் நம சிவாய... ஓம் நமசிவாய...ஓம் நம சிவாய..

இறைபக்தி என்பது அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று. கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என சொல்லி வருகின்றனர். அந்த வகையில் அது எம்மதமாக இருந்தாலும் அவரவர்களுக்கென்று உரிய இறைவனை வழிபடுகின்றனர்.

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் , தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் என கருதப்படுகிறது.

பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது

அந்த வகையில் , இந்து சமயத்தில் கூறப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானின் பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.

கொடுப்பதற்கு சிவன் இருக்கையில்தடுப்பதற்கு எவன் இருக்கான்!

காப்பதில் என் சிவன் போல்கடவுள் இங்கு யாரு!கர்ம வினைகளையும் தீர்த்திடும்ஆலவாயன் திருநீரு!

எவன் போனால் என்னசிவன் இருக்கான் எனக்கு

ஈசனின் கடைக்கண் உன்மேல் இருக்க கவலைகள் உனக்கேன் மனமேவருவது வரட்டும் துணிந்துநில் தினமேகஷ்டங்கள் உன்னை அண்டாது இனிமே

ஒருவனை யார் கைவிட்டாலும்அவன் நம்பும் ஈசன் அவனைஒரு நாளும் கைவிடமாட்டான்

ஆதியும் அந்தமும் ஆன சிவனேஅழியா பெருவாழ்வு டுப்பவனும் அவனே!உருவமும் அருவமும் ஆன ஈசனேஉள்ளிருந்து என்னை இயக்கும் சக்தியும் அவனே!

உன்னை நினைக்காத நாளும் இல்லைஉன்னை நினைக்காமல் நானும் இல்லைசிவ சிவ! ஓம் நமசிவாய!

பொய்யான உலகில்மெய்யான வாழ்வு தரும் மகாதேவா!சிக்கென உன்னை பிடித்தால் என்சிக்கல்கள் பட்டென பறந்தோடும் பரமேஸ்வரா!அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே!

என்உயிரைஉடல் மறந்தாலும்உடலை இயக்கும் உயிர் மறந்தாலும்

கண்கள் இமைப்பதை மறந்தாலும்என் நெஞ்சம் துடிப்பதை மறந்தாலும்என் உள்ளிருந் தோங்கும்நமச்சிவாயத்தை நான் மறவேனே!

எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்கஎதற்கும் அஞ்சேன்

எப்பொழுதும் அஞ்சேன்!கையிலே சூலம்கழுத்திலே ஆலகாலம்

எம் சிவனை தொழுவோர்க்குஏதுமில்லை கேடு காலம்

எங்கே உன்னை வேண்டாம் என ஒதுக்கி வைக்கிறார்களோஅங்கே சிவன் உன்னை செதுக்கி உயர்த்தி வைப்பார்.பொறுத்திரு! சிறந்திரு!

உனக்காக யாரும் இல்லை என்று கவலை படாதேநான் இருக்கிறேன்!

உனக்கான எதுவும்உன்னை விட்டு போகாதுஉன்னை விட்டு போனால்அது உனக்கானது அல்ல

சவம் ஆகும்வரைசிவனை நினை மனமே..

நீ சுகம் ஆவாய் அனுதினமே..

எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கவலையில்லை

என்னுடன் இருப்பது என் அப்பன் ஈசன்

படியளக்க சிவம் இருக்க பஞ்சமில்லா வாழ்வு இருக்கும்!

அன்பும் நிரந்தரம் இல்லைஆசையும் நிரந்தரமில்லை

உடலும் உயிரும் நிரந்தரம் இல்லைஇன்பமும் துன்பமும் நிரந்தரம் இல்லைஆனால் ஈசனே…நீ மட்டும் எனக்கு எப்பொழுதும் நிரந்தரம்

வெற்றி சிவனின் பரிசு தோல்வி சிவனின் சோதனை சிவன் இன்றி எதுவுமில்லைசிவனை நினைப்போம், அவரே நம் துணை!

உன்னை சரணடைந்து விட்டேன் அப்பனேஇனி வாழ்வதும் வீழ்வதும் உன் பொறுப்பு

கடவுள் உனக்கு கஷ்டங்களை தரும் போது கலங்காதே

அவர் உனக்கு கஷ்டங்களை கொடுப்பது உன்னை சோதிக்க அல்ல உன்னால் எவ்வளவு சோதனையைதாங்க முடியும் என்று உணர்த்தவே!

பிறவாமை வேண்டும்மீண்டும் பிறந்தால்உன்னை மறவாமை வேண்டும்

ஒளியாய் நீ இருப்பதால்இருளை பற்றிய கவலை எனக்கில்லைஎன் அப்பனே கைலாயமலை மீது வாழும் சிவனேமெய்வாழ்வு நான் வாழ தருவாய் பலமேஉன் பாத சலங்கையில் ஒரு மணியாகஎன் மேனி உருமாற தருவாய் ஒரு வரமே!

உன்னை நினைக்காத நாளும் இல்லைஉன்னை நினைக்காமல் நானும் இல்லைசிவ சிவ! ஓம் நமசிவாய!

வழி தெரியாத பாதையில்பல வலியோடு, விடை தெரியாமல்நீ நடக்கும் போதுஉனக்கு தெரியாமல்உனக்கு துணையாக நான் வருவேன்

சிவனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லைசிவனை வணங்காத ஒரு தெய்வம் இல்லைநமச்சிவாய வாழ்க

நொடிக்கு நொடி மாறும் இந்த பிரபஞ்சம் வெறும் மாயமே அனைத்து மாற்றங்களுக்கும் உட்படாமல்சகலத்தையும் தன்னுள் வைத்து ஆட்கொள்ளும்அந்த சிவம் மட்டுமே நிரந்தரம்

வாழ்க்கையில் எத்தனை கைகள் உன்னை தள்ளிவிட்டாலும்,நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைஉன்னை கைவிடாது காக்கும்.

சிவன் எங்கு இருக்கிறார் என்று அனுதினமும் தேடாதேகாற்றாக மாறி உன் மூச்சாகஉன்னுள் என்றும் நிறைந்து இருக்கிறார், சிவபெருமான்

நான் உன் நிழலாக இருக்கும் போதுஇந்த உலகில் உன்னை வீழ்த்தஎவரும் இல்லை!

ஈசனுக்கு நன்றி சொல்வதை அனுதினமும் மறக்காதீர்கள் ஏனெனில் நமக்கே தெரியாமல் பல நேரங்களில் நம்மை ஆபத்தில்இருந்து காப்பாற்றி இருப்பார்…என்ன தான் கடவுள் ஆனாலும்

அவருக்கு நாம் பிள்ளைகள் தானே!எல்லாத் தடைகளும் தன்னால் விலகிவிடும்நம்பிக்கையோடு நாள்தோறும் தொழுவோம்நம் ஈசனை. ஓம் நமசிவாய!

கொடுப்பது ஈசன் என்று தெரிந்தால்கிடைப்பது எதுவும் குறைவாக தெரியாது.உன்னுடைய விருப்பப்படி இந்தஉலகில் எதுவும் நடப்பதில்லை

ஈசனின் விருப்பப்படியேஇந்த உலகம் இயங்குகிறதுஇதை நீ அறியும் வரைஉன்னை வாழ்வில் வெற்றி பெற இயலாது.

கீழாக நின்றாலும் தலையில் எழுதியதுநடந்தே தீரும்!ஓம் நமசிவாய

சிவன், சிவன், ஈசன், மகாதேவன், என பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், இந்து மதத்தின் முக்கியமான கடவுள். இந்திய கலாச்சாரத்தில் முதன்மையான கடுவுளாக இருக்கும், சிவபெருமானின் பொன்மொழிகள் இங்கே இடம்பெற்றுள்ளன.

சிவனை வாங்கி தொழுவோம், அவர் அருளால் மோட்சம் பெறுவோம், முக்தி அடைவோம்.. சிவ சிவ… ஓம் நமசிவாய…


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story