பகவான் கிருஷ்ணரின் உன்னதமான கருத்துள்ள பொன்மொழிகள்..தமிழில்...

Lord Krishna Quotes in Tamil
X

Lord Krishna Quotes in Tamil

Lord Krishna Quotes in Tamil-இறைபக்தி என்பது அனைவருக்கும் ஒன்றானது. அவரவர்களுக்கு பிடித்த இறைவனை வணங்கி அன்றைய நாளை பணிகளை துவங்குவது வழக்கமான ஒன்றாகும்.


Lord Krishna Quotes in Tamil-கிருஷ்ணன் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் 8வது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வடஇந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.கிருஷ்ண ஜெயந்தியன்று உறி அடித்தல் என்ற நிகழ்ச்சியானது விமர்சையாக நடக்கும். மேலும் அன்றைய தினம் வெல்ல சீடை, கார சீடை, முறுக்கு, மேலும் பல வகையான ஸ்வீட்களோடு கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதற்கு அறிகுறியாக சிறுசிறு கால்களை அரிசி மாவினால் வரைந்து நைவேத்யம் செய்வர். இதனை கோகுலாஷ்டமி என்றும்அழைப்பர். சிறுகுழந்தைகள் அன்றைய தினத்தில் கிருஷ்ணர் வேடம் தரித்து புல்லாங்குழலுடன் காட்சியளிப்பர். பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தற்காலத்தில் பள்ளி, கல்லுாரிகளிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுவதுதான் கிருஷ்ணஜெயந்தியின் ஹைலைட்டான விஷயமே.

கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

தான் சொல்லுவதே சரி என வாதிடுபவர்கள் உறவுகளை இழக்க நினைப்பவர்கள் பேசாமல் மௌவனமாய் கேட்டு கொண்டு இருப்பவர்கள் உறவுகளை தக்க வைத்து வெல்லுவார்கள்.

எது உன்னிடம் நிலைக்கும் என்று நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு போகும் எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மனதில் வேதனை அதிகமாகி விட்டால் பலம் கூட ஓர் காலகட்டத்தில் பளுவாக மாறிவிடும்.

உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே.

இயன்றதை இயலாதவற்கு கொடுத்து உதவுவதே இறை தொண்டைவிட இன்றியமையாதது ஆகும்.

அழிவின் விளிம்பில் இருப்பவனை கூட காப்பாற்றி விடலாம் ஆனால் அகங்காரத்தின் உச்சத்தில் இருப்பவனை காப்பாற்றுவது கடினம் ஆகும்.

வாய்ப்புகள் தவறும் போது அதை எண்ணி கவலை படாதே

எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய் மிக பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கிறது.

காரணமின்றி கஷ்டங்கள் வருவதில்லை கஷ்டங்களை கடந்து செல்பவனே வாழ்க்கையின் மகத்துவத்தை பெறுகின்றான்.

நம்பிக்கை சில நேரங்களில் வெற்றியை தராமல் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் பெரிய சவால்களை எதிர் கொள்ளும் சக்தியை தரும்.

வாழ்க்கையில் எப்போதும் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. ஏதேனும் பிரச்சனை வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது மன தைரியம்.

உனக்கு வந்திருப்பது எவ்வளவு சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே. உனக்கு துணையாக இருப்பவர் கடவுள் என்று சோதனையிடம் சொல் .

*அன்பிற்காக ஏங்குபவர் இதயத்தில் சுயலம் இருக்காது. இவர்கள் தெய்வத்தை தேடி செல்ல தேவையில்லை. தெய்வங்களே இவர்களை தேடி பின் தொடரும்.

*வாழ்க்கையின் லட்சியம் மட்டுமே... தேடப்படவேண்டிய செல்வம்

*வாய்ப்புகள் தவறும்போது அதை எண்ணி கவலைப்படாதே எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய். மிக பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கிறது.

*ஒருவரை சிரிக்கவைப்பதற்கும் மகிழ்விப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சிரிக்க வைப்பது எளிது. ஆனால்...சந்தோஷப்படுத்துவது தான் கடினம்...

*எத்தனை இன்னல்கள் வந்தாலும் சிறந்த சிந்தனை மற்றும் உயர்ந்த எண்ணங்கள் . நம்மை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும்

*நம்மை பற்றி யார் நினைத்தால் நமக்கென்ன? நம்மை பற்றி நாம்

அறியாததையா அவர்கள் அறிந்திட போகிறார்கள்.

அன்பும் அறிவுரையும் இலகுவாக கிடைத்துவிடுவதால்தான் அவற்றிற்கு இன்று மரியாதையானது இல்லாமல் இருக்கின்றது போல..

*சவால்களை சவால்களாக எதிர்கொண்டால் அயர்வு, தயக்கம், சவால்களை புதிய வாய்ப்புகளாக மாற்றினால் அழகு, வெற்றி..

*எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்...

இப்படித்தான் வளர்ந்தோன் என்று வாழ்ந்து காட்டுங்கள்...

*-மனதில் வேதனை சுமை அதிகமாகிவிட்டால் பலம் கூட ஓர் கால கட்டத்தில் பளுவாக மாறிவிடும்.

*பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை உணரச்செய்தால் போதும்...

*நீ ....நீயாக வாழ கற்றுக்கொள்... சிலர் உன்னை விரும்புவார், சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படாதே,.. இது உன் வாழ்க்கை...

வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது எளிதாக தோன்றும்

ஆனால் அவ்வழியே அவர்களை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல..

*நீ சுமக்கிற நம்பிக்கை....நீ.. கீழே விழும்போது உன்னை சுமக்கும்..

*எதுவாயினும் மிகுந்த கவனத்துடன் தேவைக்கு ஏற்ப தேர்வுசெய்யவேண்டும். ஏனெனில் இன்று தேவை என்பது நாளை தேவையற்றதாக மாறுகின்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!