கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... கீதையின் நாயகனே .....கிருஷ்ணா...கிருஷ்ணா...படிங்க...

கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா...  கீதையின் நாயகனே .....கிருஷ்ணா...கிருஷ்ணா...படிங்க...
X

அழகியே அலங்காரத்தில் கிருஷ்ணர் -ராதை  (கோப்பு படம்)

krishna quotes in tamil கிருஷ்ண பரமாத்மா நம்மைக் காத்தருளுவார் என்ற நம்பிக்கை அனைத்து பக்தர்களின் உள்ளங்களிலும்எப்போதும் நிரம்பியுள்ளது. அவரைப் பற்றிக் காண்போம்....படிங்க...

krishna quotes in tamil

கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் 8வது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள்.

தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

krishna quotes in tamil


krishna quotes in tamil

கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், ஹரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

கிருஷ்ண வழிபாடு, பாலகிருட்டிணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் 4வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணன் (திருமால்) 2ம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் கூறப்பட்டவர். எனினும் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருட்டிணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. ஒரிசாவில் செகன்னாதர், இராசத்தான், மகாராட்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருஷ்ணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960களில் உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்பு கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது. 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.

krishna quotes in tamil


krishna quotes in tamil

புனைப்பெயர்கள்

கிருஷ்ணன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு கரிய நிறம் பொருந்தியவன் என்பது பொருள். கரி (கருமை) + இருள் (இருட்டு) + அணன் (பொருந்தியவன்) = கரிட்டிணன் > கருட்டிணன் > கிருட்டிணன் (கிருஷ்ணன்) > கிருட்டு > கிட்டு.

கிருஷ்ணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார். அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள்படும் மோகன், "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள்படும் கோவிந்தன், "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள்படும் கோபாலன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் ஆயர்களையும் பசுக்களையும் தொடர்மழையிலிருந்து காக்க, கோவர்த்தன மலையை குடை போல் தூக்கியதால் கோவர்தனன் என்றும், கோகுலத்தில் வளர்ந்ததால் கோகுலன் என்றும், ராதையின் (நப்பின்னை, கருப்பாயி) உள்ளங்கவர் காதலன் என்பதால் ராதா கிருஷ்ணன் (கருப்பாயி-கருப்பன்) என்றும், வசுதேவர் – தேவகி இணையர்க்கு பிறந்ததால் வாசுதேவன் என அடைமொழிகளால் கிருஷ்ணரைக் கொண்டாடுகிறார்கள். பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றனர்.

krishna quotes in tamil


krishna quotes in tamil

பகவான் கிருஷ்ணனர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை '' கண்ணா '' '' முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.கண்ணனைப்போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம்அளித்து முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.

மதுரா நகரில் தேவகி-வாசுதேவருக்கு 8 வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணன் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர். கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

krishna quotes in tamil


குஜராத் மாநிலம் துவாரகையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில் (கோப்பு படம்)

krishna quotes in tamil

பாரதப்போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான்இந்து மக்களின் புனித நுாலான பகவத் கீதையாக உள்ளது. தன் கடைசிக்காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.

krishna quotes in tamil

பகவான் கிருஷ்ணரின் உபதேச வாக்கியங்கள் இதோ....

*அன்பிற்காக ஏங்குபவர் இதயத்தில் சுயநலம்இருக்காது. இவர்கள்தெய்வத்தை தேடி செல்ல தேவையில்லை. தெய்வங்களே இவர்களை தேடி பின் தொடரும்.

*சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்துவிடும் . ஆனால் உண்மை ஒரு நாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

*விரக்தியில் நம்மை வீழ்த்த காத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை உடைத்தெறிய உதவும் மகத்தான சக்தி மனஉறுதி.

*சூழ்ச்சி வலைகளை சூட்சுமத்தால் வெல்ல இயலவில்லையெனில் சுதர்சனம் போல் தகர்த்தெறிய வேண்டும்.

*நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொருசம்பவமும் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தினை கற்று தருகிறது.

*மற்றவர்களுக்கு பாவம் பார்த்தே நம்மில் பலர் பாவமான நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

*அடுத்தவரை ஆனந்தத்தில் ஆழ்த்தி பார்ப்பது என்பது ஆண்டவன் சேவைக்கும் அப்பாற்பட்டதாகும்.

*எதிர்பார்ப்புகள் பல நேரங்களில் ஏமாற்றங்களையே தரும். கடமையை செய்து பலனை எதிர்பாராமல்இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழிவகுத்திடும்.

krishna quotes in tamil


சேலத்தில் பிரமாண்ட பொருட்செலவில் அமைய உள்ள இஸ்கான் கோயிலின் மாதிரித் தோற்றம் (கோப்பு படம்)

(இடம்:சேலம்-ஓமலுார் மெயின்ரோடு, கருப்பூர்) வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

krishna quotes in tamil

*இன்பத்திற்கு வழி வகுக்கும் வாசனை திரவியங்கள்.. நற்சிந்தனையும், நன்மை பாராட்டும் குணமும்....

அழிவு மற்றும் நரகத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன: காமம், கோபம் மற்றும் பேராசை.

ஒரு மனிதன் தனது நம்பிக்கைகளால் உருவாக்கப்படுகிறான். அவர் நம்புவது போல. எனவே அவர் ஆகிறார்.

உங்கள் கடமையைச் செய்து உங்கள் விதியை வடிவமைக்கவும். அதுவே வாழ்க்கையின் ரகசியம். ஓ மனிதனே! உங்கள் சொந்த கைகள் உங்கள் சொந்த விதியை வைத்திருக்கின்றன.

எல்லா வகையான கொலையாளிகளிடையேயும், நேரம் இறுதியானது, ஏனென்றால் நேரம் எல்லாவற்றையும் கொல்கிறது.

நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஈகோவுடன் அல்ல, காமத்தோடு அல்ல, பொறாமையுடன் அல்ல, அன்பு, இரக்கம், பணிவு, பக்தி ஆகியவற்றால்.

மகிழ்ச்சியின் திறவுகோல் ஆசைகளை குறைப்பதாகும்.

உங்கள் கட்டாய கடமையைச் செய்யுங்கள், ஏனென்றால் செயலற்ற தன்மையை விட நடவடிக்கை உண்மையில் சிறந்தது.

நீங்கள் விரும்புவதற்காக நீங்கள் போராடவில்லை என்றால். நீங்கள் இழந்ததற்காக அழ வேண்டாம்.

நீங்கள் ஏன் தேவையில்லாமல் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் யாருக்கு அஞ்சுகிறீர்கள்? உன்னை யார் கொல்ல முடியும்? ஆன்மா பிறக்கவில்லை, இறக்கவில்லை.

ஏனென்றால் ஒரு நகலை விட அசல் எப்போதும் சிறந்தது!

krishna quotes in tamil


சேலம் கருப்பூரில் பிரமாண்ட பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் இஸ்கான்கோயிலில் தற்காலிக மூலவர் (கோப்பு படம்)

krishna quotes in tamil

மகிழ்ச்சி என்பது வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மனநிலையாகும்.

என்ன நடந்தாலும் நல்லது. என்ன நடக்கிறது என்பது நன்றாக நடக்கிறது. என்ன நடந்தாலும் நல்லது. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்க.

உங்கள் வேலையில் உங்கள் இருதயத்தை அமைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதன் பலனை ஒருபோதும் பெற வேண்டாம்.

நீங்கள் என்னை வெல்ல ஒரே வழி அன்பு மூலம், அங்கே நான் மகிழ்ச்சியுடன் வெற்றி பெறுகிறேன்.

மனதை வென்ற ஒருவருக்கு, ஒரு மனம் நண்பர்களுக்கு சிறந்தது, ஆனால் அவ்வாறு செய்யத் தவறிய ஒருவருக்கு, ஒரு மனம் மிகப்பெரிய எதிரி.

*காரணமின்றி கஷ்டங்கள் வருவதில்லை கஷ்டங்கள் கடந்த செல்பவனே வாழ்க்கையின் மகத்துவத்தை பெறுகிறான்.

*தான் சொல்வதே சரி என வாதிடுபவர்கள் உறவுகளை இழக்க நினைப்பவர்கள். பேசாமல் மவுனமாய் கேட்டு கொண்டுஇருப்பவர்கள் உறவுகளை தக்க வைத்து வெல்வார்கள்.

*எது உன்னிடம் நிலைக்கும் என நினைக்கிறாயோ அதுதான்முதலில் உன்னை விட்டு போகும். எதுவும் யாருக்கு நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

*மனதில் வேதனை அதிகமாகிவிட்டால் பலம் கூட ஓர் காலகட்டத்தில் பளுவாக மாறிவிடும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!