பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

X
கொண்டத்து காளியம்மன் கோவில், பெருமாநல்லூர்.
By - S.Elangovan,Sub-Editor |21 March 2022 7:15 AM IST
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நாளை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் குண்டம் விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டுக்கான குண்டம் விழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜைகள், திருவீதியுலா தினமும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா, நாளை (22ம் தேதி) அதிகாலை நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை விழா குழுவினரும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu