கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் இது தானாம்
சந்திரனை அதிபதியாகக்கொண்டிருக்கும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பொதுப்பலன் மற்றும் குணங்கள் பற்றிய தொகுப்பு
ஒழுக்கமான குணமும் எந்த பிரச்சினையையும் பாரபட்சமின்றி அணுகுபவராகவும் இருப்பீர்கள். உங்கள் புத்தி கூர்மையானதாகவும் புது புது ஐடியாக்களை அளிக்க கூடியதாகவும் இருக்கும். ஏமாற்றுக்கார்களால் ஏமாற்றப்பட்டாலும் அவர்களது கெட்ட செய்கைகள் குறித்து எதுவும் சொல்லமாட்டீர்கள்.
சாதுவான குணம் கொண்ட நீங்கள் அனைவரையும் கவர்வீர்கள். திருப்தியானவராகவும், சகஜமாக அனைவரிடமும் சகஜமாக பழகுபவராகவும் நட்பு பாராட்டுபவராகவும் இருப்பீர்கள்.
படிப்பில் சூட்டிகையான நீங்கள், வார்த்தை ஜாலம் மிக்கவராக இருப்பீர்கள். எந்த பாடத்தையும் உடனடியாக புரிந்து கொள்ள திறன் கொண்டிருப்பீர்கள். உங்களது இனிமையான பேச்சாலும் நகைச்சுவை திறனாலும் அனைவரையும் வசப்படுத்துவீர்கள்.
போதிய மனவலிமை இருந்தாலும், எந்த முடிவையும் உடனடியாக எடுக்க திணறுவீர்கள். அமைதியை விரும்புபவர் ஆதலால் எந்த சண்டையிலும் பங்கு கொள்ள மாட்டீர்கள். சிறிது கூச்ச சுபாவமாக இருந்தாலும் புதிய நண்பர்களை ஏற்படுத்தி கொள்வீர்கள். மேலும் நண்பர்களிடம் எவ்வாறு காரியம் சாதிக்க வேண்டுமென உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்களுக்கு சாதகமாக இருந்தால் கட்சி மாறிவிடுவீர்கள்.
மற்றவரிடம் வேலை செய்வதை விட சுயமாக தொழில் செய்வதையே விரும்புவீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். எல்லா வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்க விரும்புவீர்கள். உங்களது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பணியால் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்களது முடிவுகளுக்கு எப்போதும் கட்டுப்படுவீர்கள். ஆளுக்கு தகுந்தாற்போல உங்கள் முடிவுகளை மாற்றமாட்டீர்கள். உங்களுக்கு பிடித்த்தை மட்டுமே செய்வீர்கள்.
பொதுவாக நீங்கள் எந்த பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க மாட்டீர்கள். ஏனெனில் பணத்தை சிறப்பாக சேமிக்க தெரிந்தவர் நீங்கள். ஆடம்பரத்தை விரும்பாமல் அமைதியையும் மற்றவருக்கு உதவுவதையுமே விரும்புவீர்கள்.
உங்களது குடும்பத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பீர்கள். எந்த பிரச்சினையையும் தீர்ப்பதில் கெட்டிக்காரர் நீங்கள். எனவே நீங்கள் ஒரு சிறந்த ஆலோசகராக விளங்குவீர்கள். நேர்மறையான அறிவுரையை வழங்கி நல்ல வழியில் மக்களை திருப்ப நினைப்பீர்கள்.
வாழ்க்கை ஒரு விளையாட்டு என்றும் இந்த உலகை ஒரு விளையாட்டு மைதானமாகவும் நினைப்பீர்கள். மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் சுறுசுறுப்பான உங்களுக்கு சோம்பலாக உட்கார்ந்திருப்பது அறவே பிடிக்காது. கலகலப்பான குணமுடைய நீங்கள் குற்றங்களை பொறுத்து கொள்ள மாட்டீர்கள். உங்களது முயற்சியால் லட்சியத்தை அடைவது உங்களது சிறப்பு குணமாகும்.
கல்வி மற்றும் வருமானம்
வேலையில் ஒழுங்கை விரும்புவீர்கள். எல்லோரையும் பின் தள்ளி உங்களை நிரூபிக்க உங்களுக்கு தெரியும். உங்களுக்கு சாதகமான தொழில்கள்: தங்க நகை செய்பவர், கலைஞர் மற்றும் தொழிலதிபர், சாகசம் செய்பவர், ஜிம்னாஸ்ட் அல்லது சர்கஸ் கலைஞர், பேப்பர் உற்பத்தி தொடர்பான தொழில், பிரிண்டிங், பதிப்பகம், ஷேர் மார்கெட், பேக்கேஜிங், பொம்மை செய்தல், கடை நடத்துதுதல், கிளார்க், பேங்க், டைப்பிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், அழகு பொருட்கள் தொடர்பான பிசினஸ், மருத்துவம், சைக்காலஜிஸ்ட், ஜோதிடர், துணி தொடர்பான தொழில், விவசாயம், தோட்டக்கலை தொடர்பு பணிகள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, செய்தி வாசிப்பு, பத்திரிக்கை, களீமண் மற்றும் செராமிக் தொடர்பான துறைகள் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதையே எப்போதும் நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். உங்களது வாழ்க்கை தூனை சிறந்த பழக்க வழக்கம் கொண்டவர். பெரும்பாலும் உங்களது முதல் குழந்தை ஆணாக இருக்கக்கூடும்.
பண்புகள்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்:
• அறிவாளி
• ஆர்வமிக்கவர்
• கண்ணியமான நடத்தை
• கடின உழைப்பாளி
• கவர்ச்சிகரமான பாத்திரம்
• அமைதியானவர்
• தன்னடக்கம் உள்ளவர்
• சுய ஒழுக்கம் உள்ளவர்
• வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளவர்
• புத்திசாலி
• சிலர் சுயநலவாதிகள்
• தவறு கண்டுபிடிக்கும் இயல்பு உள்ளவர்
• பகுப்பாய்வு திறன் உள்ளவர்
• வசதியான முதுமை உள்ளவர்
• அதிகாரம் மற்றும் பதவி
• படைக்கும் திறன் உள்ளவர்
• பயனுள்ள தொடர்புள்ளவர்
• வீட்டை விட்டு விலகி இருக்க ஆசை
• சில நேரங்களில் கவனக்குறைவு
• பகுத்தறிவுவாதி (Rationalist)
• சண்டைக்காரர்ர்
• சட்டத்தை மீறும் பழக்கம்
சாதகமற்ற நட்சத்திரங்கள்
• சுவாதி
• அனுஷம்
• மூலம்
• அஸ்வினி
• பரணி
• கிருத்திகை - மேஷ ராசி
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்களில் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் இந்த நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுடன் கூட்டுறவைத் தவிர்க்கவும்.
உடல்நலப் பிரச்சினைகள்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்:
• வாயு பிரச்சினைகள்
• வயிற்று வலி
• குடல் அடைப்பு
• குடல் அழற்சி
• செறியாமை
• இரத்தக்கழிச்சல்
• வாந்தி மற்றும் பேதி
• சுவாச நோய்
• நரம்பு வலி
• மனநில கோளாறுகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu