கடக ராசிக்காரர்களே... இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்குதுன்னு தெரியுமா?

கடக ராசிக்காரர்களே... இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்குதுன்னு தெரியுமா?
X

kadagam rasi palan 2023 in tamil- கடக ராசிக்காரர்களே... உங்களுக்கு இந்த ஆண்டு பலன்கள் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ளலாமா?

Kadaga Rasi Palan 2023- கடக ராசிக்காரர்களை பொருத்த வரை இந்த ஆண்டு கொஞ்சம் கவனமாகவும், அதிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

Kadaga Rasi Palan 2023- கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.


கிரக மாற்றங்கள்

29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள் நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.


அரசியல்வாதிகள்

அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சினையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும். கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கவுரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.

பெண்களுக்கு

குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள். மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையில் உள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.

புனர்பூசம் 4ம் பாதம்

இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சினைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.

பூசம்

இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும். வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மனம் அமைதி அடையும்.

ஆயில்யம்

இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.

பரிகாரம்

திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்- மேற்கு, வடக்கு

புனர்பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய கடக ராசிக்காரர்களில் சிலருக்கு இந்த 2023 ம் ஆண்டில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். சிலர் கவனமாக இல்லாவிட்டால் பெரிய கஷ்டமும், தடுமாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.


கடக ராசிக்கு 2023 பலன்கள் கலவையான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். புனர்பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை அடங்கிய கடக ராசியினருக்கு புனர்பூச நட்சத்திரத்தை சேர்ந்தவர்களில் சிலருக்கு சனி தசை நடக்கும். அவர்கள் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

2023ம் ஆண்டு சனி, குரு, ராகு - கேது பெயர்ச்சி என முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி அடுத்தடுத்து நடப்பது கடக ராசிக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சனிப் பெயர்ச்சி - ஜனவரி 17ம் தேதி கடக ராசிக்கு 7ம் வீட்டிலிருந்து, 8ம் வீட்டிற்கு அஷ்டம சனியாக செல்ல உள்ளார்.


குரு பெயர்ச்சி

ராசிக்கு 9ல் இருக்கும் உங்களுக்கு நன்மையே தரும் நிலையில், குரு பகவான் 2023 ஏப்ரல் 22ம் தேதி 10ம் இடமான மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். குரு ராகுவுடன் 10ல் இருப்பதும் சிறப்பான அமைப்பென்றே சொல்ல வேண்டும். ராகுவின் அமைப்பும் சிறப்பான பலன்கள் பெறலாம்.


சனி பகவான் 8ம் இடத்தில் இருப்பதால் உங்களின் தொழில், வியாபாரம், உத்தியோகம் என பணி சார்ந்த எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு மந்த நிலை இருப்பதாக உணர்வீர்கள். ஏதோ சரியாக இல்லாதது போல உணர்வீர்கள். உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு, உயர்வும் கூட பெரியளவில் திருப்தி தரக்கூடியதாக இருக்காது.

பணியிடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதில் ஒருவித திருப்தியற்ற மனநிலையிலேயே இருப்பீர்கள்.இந்த ஆண்டைப் பொறுத்த வரையில் உங்களுக்கு பெரிய பின்னடைவோ, கஷ்டமோ இல்லாமலும், அதே சமயம் பெரிய உயர்வை தரக்கூடிய அமைப்பும் இல்லை என்றே சொல்லலாம். நடப்பாண்டில் பணி சார்ந்த விஷயங்களில் பேச்சைக் குறைத்து, உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்வது அவசியம்.

​குரு தரும் பலன்

குரு பகவான் 9ம் இடத்தில் இருப்பதால் சுப காரியங்கள் சார்ந்த விஷயங்களும், உங்கள் முயற்சிகளுக்கு நன்மையும் பெறக்கூடிய அமைப்பு உண்டு. அவர் ஏப்ரலில் 10ம் இடமான களத்திர ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்வதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார தடை கொடுப்பார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.


​திருமணம்

​பொதுவாக ஜாதகத்தில் ராசி அல்லது லக்கினத்திற்க்கு 8ல் சனி இருப்பதும், கோள்சாரபடி ராசிக்கு 8ல் சனி செல்வதால் திருமண தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் கடக ராசிக்கு களத்திர காரகன் சனி பகவான் ஆவார். அந்த வகையில் தற்போது உங்கள் ராசிக்கு 8ல் சனி செல்வதால் திருமண முயற்சிகள் தாமதமாகும். காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மிகவும் போராட்டமான சூழலே இருக்கும். எதிர்ப்பு அதிகரிக்கும்.

திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வது மட்டுமில்லாமல் மரியாதை கொடுத்து பேசுவது அவசியம். குறிப்பாக நீங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தை மரியாதையுடன் பேசுவது அவசியம். இல்லையேல் பிரச்னையை சமாளிப்பது கடினம்.

​மாணவர்கள்

மாணவர்களின் படிப்புக்கு பெரிய தடை எதுவும் இருக்காது. ஆனால் அதே சமயம் உங்களின் ஆர்வம் முழுவதும் படிப்பில் வைத்திருப்பது அவசியம். தேவையற்ற விஷயங்களில் கவனச் சிதறல் உங்கள் படிப்பை பாதிக்கும். வண்டி வாகனங்களில், வேகத்தில் கூடுதல் கவனம் தேவை.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளவும்.


நிதி நிலை

ராசிக்கு 9ல் குரு அமர்ந்திருப்பதால் கடக ராசிக்கு நிதி சார்ந்த சிறப்பான பலன் கிடைக்கும். அதே போல அவர் ஏப்ரலில் மேஷ ராசியில் ராகுவுடன் சேர்வதும், உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மேன்மையைத் தரும் உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். மற்றபடி, உங்களின் ஆரோக்கியம், குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பங்குச் சந்தை, முதலீடு போன்ற விஷயங்களில் கவனம்.மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என்றாலும், புதிய பழக்க வழக்கங்களில், கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். லாட்டரி, ரேஸ் போன்ற சூதாட்ட விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது. மற்ற படி 2023ல் மற்ற கிரகங்களின் பெயர்ச்சி, கோள்சார பலன்களைப் பொறுத்து கடக ராசிக்கு பலன்கள் அந்த காலகட்டத்தில் சிறப்பாகவோ அல்லது மோசமடையவோ வாய்ப்புள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!