பழனி கோவிலில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

பழனி கோவிலில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
X

ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பழனி கோவிலில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

பழனி முருகன் கோவிலில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளி்ல் மூன்றாம் படைவீடு மட்டும் அல்ல. தமிழகத்தின் இந்து சமய அறநிலைய துறைக்கு அதிக வருவாய் ஈட்டி தரக்கூடிய கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது.இன்றளவிற்கு பழனி முருகன் கோவில் தான் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் பக்தர்களின் அதிக வருகை தான். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கைகளை செலுத்தி வருகிறார்கள்.

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் பழனி ரோப்கார் வழியாக ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றார். பின்னர் ஆனந்தவிநாயகர் சன்னதியில் வழிபட்டார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்தார். தொடர்ந்து காரில் புறப்பட்டு சென்றார்.

ஜார்கண்ட் மாநில கவர்னர் வருகையையொட்டி பழனி மலைக்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!