பிப்ரவரி 16 ரத சப்தமி: வழிபடும் முறைகளும், அதன் பலன்களும்
ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இது குறிப்பாக சூரிய தேவன் (இந்து சமயம்) ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது
ரத சப்தமி என்பது, சூரிய தேவன் (இந்து சமயம்) ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் ஐ குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது சூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது.
மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.
ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம், அதைத்தொடர்ந்து வரும் தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி, மற்றும் சித்திரை வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களை மக்கள் எதிர்பார்க்கும் விதமாக உள்ளது.
பஞ்ச பூதங்களில் சூரியனுக்கு மட்டும்தான் பகவான் என்று சொல்லி வழிபடுகிறோம். விஷ்ணுவாகவும், சிவனாகவும் சூரியன் இருக்கிறார். ரத சப்தமி நாளில்தான் சூரிய பகவான் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ரத சப்தபி நாள் அன்று ஆண்களும், பெண்களும் அதிகாலையில் எழுந்து குறித்த முகூர்த்தத்தில் குளிக்க வேண்டும். எருக்கன் இலைகளை 7 எடுத்து கொண்டு அதை தலைமேல் வைத்து, ஆண்கள் அதற்கு மேலாக பச்சரிசி, எள், விபூதி வைத்துகொள்ள வேண்டும். இதுவே பெண்கள் எருக்கன் இலைக்கு மேலாக பச்சரிசி, எள், மஞ்சள் பொடி வைத்து குளிக்க வேண்டும்.
அப்படி குளிக்கும்போது, ஓம் சூரியாய நமக, ஓம் ஆதித்யாய நமக என்று சொல்ல வேண்டும். முன் ஜென்ம பாவங்கள் மற்றும் தற்போது நாம் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்யும் பாவங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். குழாய் தண்ணீரில், எள்ளு, மஞ்சள் பொடியை அப்படியே விட்டுவிடுங்கள். எருக்கன் இலைகளை செடிக்கு கீழே போடுங்கள். அது மக்கிவிடும்.
இப்படி குளிப்பதால் உடலில் இருக்கும், உபாதைகள் போய்விடும். அகத்திலும் புறத்திலும் இருக்கக்கூடிய உபாதைகள் போய்விடும். இந்நிலையில் இதற்கு காரணம் உண்டு
பீஷ்மர் முள்ளு படுக்கையில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு உயிர் போகவில்லை. அவர் சாக வேண்டும் என்று நினைக்கிறார். வேத வியாசர் அப்போது வருகிறார். அவரிடம் உயிர் போகவில்லை நான் என்ன பாவம் செய்தேன் என்று பீஷ்மர் கேட்கிறார். நீங்கள் தவறு செய்யவில்லை என்று நினைத்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால் தப்பை தட்டிக் கேட்காமல் இருந்துள்ளீர்கள் என்று வியாசர் சொல்கிறார்.
உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ''பீஷ்மா, இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்'' என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.
திரௌபதி துயில் உரிக்கப்படும்போது அதை பார்த்து தட்டிக்கேட்வில்லை. அதை செய்தவரை கொலை செய்யவில்லை. இதனால் பாவம் செய்துள்ளீர்கள். இதிலிருந்து தப்பிக்க சூரியனை பிழிந்து உங்களிடம் நான் கொடுக்க வேண்டும். எருக்கன் இலைதான் சூரியனை பிழிந்து வைத்துள்ளது. அதை உங்கள் படுக்கையில் அடுக்குகிறேன். இதைத்தொடர்ந்து பீஷ்மர் உயிர் நல்ல முறையில் முக்தி பெறுகிறது.
இந்த காரணத்தினால் நாம் இந்த நாளில் எருக்கன் இலையை வைத்து குளிக்க வேண்டும். இதுபோல பீஷ்மருக்கு நாம் அடுத்த நாளில் தர்பணம் கொடுக்கலாம். இதனல் நாம் செய்த பாவம் நீங்கும்.
பிப்ரவரி 16 காலை 5.17 முதல் 6.59 மணி நேரத்திற்குள் குளிக்க வேண்டும். இடைத்தொடர்ந்து சூரியனுக்கு, தண்ணீர் இரைத்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறையும் வழிபடும் முறையும்:
ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.
இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.
சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, "ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu