மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் புக் செய்வது எப்படி?
Madurai Meenakshi Amman Thirukalyanam-வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விஷேசங்களில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலமாகவும் புக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ள மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா முழுமைக்கும் இருந்து பல்வேறு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மதுரைக்கு சுற்றுலா வந்து மீனாட்சி அம்மனை தரிசிக்க விரும்புபவர்களும் ஆன்லைன் மூலம் புக் செய்து முன்பதிவு செய்துகொள்ளமுடியும்.
வரும் ஏப்ரல் 22ம் தேதி துவங்கவுள்ள சித்திரைத் திருவிழா மே 4ம் தேதி வரைக்கும் நடக்கவுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே மாதம் காலை 8.30 மணிக்கு நடைபெறும். கோவிலின் வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுக்க இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
மீனாட்சி திருக்கல்யாண கட்டண விவரங்கள்
மீனாட்சி அம்மனை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ 500 கட்டண சீட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொது தரிசனம் செய்ய வரும் மக்களின் வசதிக்காக தெற்கு கோபுரம் வழியாக வருகை தரவும் பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் நபர்களுக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் அனுமதிக்கிறார்கள்.
ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் என்கிற தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை இணைய தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
- குறிப்பிட்ட இணையதளத்தில் உள்நுழைந்து முன்பதிவு செய்யமுடியும்.
- டிக்கெட் முன்பதிவு செய்ய மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் என்பதை கிளிக் செய்யவும்.
- சிறப்பு தரிசனம், பூஜை என்பதை தேர்ந்தெடுக்கவும். மீனாட்சி திருக்கல்யாணம் என்பதை கிளிக் செய்யவும்
- மற்ற நேரங்களில் மீனாட்சியை தரிசிக்க விரும்புபவர்கள் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும்.
- உங்கள் தகவல்களை உள்ளீடு செய்யவும்
- கட்டண விவரங்களைத் தேர்வு செய்யவும்
- பேமண்ட் வகை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, யூபிஐ உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையைத் தேர்வு செய்யவும்.
- கட்டணம் செலுத்துவது முடிந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்
- கட்டணம் செலுத்தியதும் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS வரும்
- தரிசனத்தின் போது அடையாள அட்டையுடன் தரிசன டிக்கெட்டையும் எடுத்து வரவேண்டும்.
- முன்பதிவு வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
- முன்பதிவு வரும் ஏப்ரல் 25ம் தேதி முடிவடையும்
- நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும்
நீங்கள் ரூ.500 கட்டண பிரிவில் தரிசிக்க விரும்பினால், உங்களால் 2 சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
நீங்கள் ரூ.200 கட்டண பிரிவில் தரிசிக்க விரும்பினால், 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
ஒரே நபர் இரண்டு பிரிவிலும் சீட்டு முன்பதிவு செய்ய முடியாது.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிக்கெட் கட்டாயம்.
ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- madurai meenakshi amman temple
- madurai sithirai thiruvila date 2023
- madurai meenakshi amman thirukalyanam 2022
- meenakshi amman thirukalyanam 2022
- madurai meenakshi amman thirukalyanam
- madurai meenakshi thirukalyanam
- meenatchi thirukalyanam
- meenakshi thirukalyanam
- madurai meenakshi thirukalyanam online ticket booking
- madurai meenakshi amman temple official website
- madurai meenakshi amman temple contact number
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu