Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

செப்டம்பர் 6, 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 21

06.09-2024 வெள்ளிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - பிற்பகல் 01.47 pm வரை திருதியை திதி பிறகு சதுர்த்தி திதி

நக்ஷத்திரம் - காலை 09.18 am வரை ஹஸ்தம் பிறகு சித்திரை

யோகம்- காலை 06.93 am வரை சித்த யோகம் காலை 09.18 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM .

எமகண்டம் - 03.00 PM- 04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.16 PM.

சந்திராஷ்டமம் - காலை 09.18 am வரை சதயம் பிறகு -பூரட்டாதி

இன்றைய (06-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் ஈடேறும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : முடிவுகள் கிடைக்கும்.

பரணி : வரவுகள் மேம்படும்.

கிருத்திகை : பொறாமைகள் குறையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அலைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : பணிகள் நிறைவேறும்.

பூசம் : ஆதரவுகள் மேம்படும்.

ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : நெருக்கடிகள் குறையும்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அஸ்தம் : விமர்சனங்கள் மறையும்.

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும். உபரி வருமானம் குறித்த சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

சித்திரை : வரவுகள் கிடைக்கும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார முயற்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : மேன்மை ஏற்படும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

கேட்டை : லாபகரமான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள் மூலம் லாபம் உண்டாகும். மருத்துவ துறைகளில் லாபம் பெருகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். கடந்த கால நினைவுகள் தோன்றி மறையும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

மூலம் : லாபங்கள் கிடைக்கும்.

பூராடம் : அமைதியான நாள்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு மாற்றம் ஏற்படும். கவலை அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

சதயம் : அனுபவம் வெளிப்படும்.

பூரட்டாதி : மாற்றமான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 6, 2024

சுப காரிய எண்ணம் சாதகமாக நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மனை விற்பனையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

ரேவதி : நெருக்கம் மேம்படும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!