Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

செப்டம்பர் 12, 2024 வியாழக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 27

12.09-2024 வியாழக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - இரவு 07.05 pm வரை நவமி திதி பிறகு - தசமி திதி

நக்ஷத்திரம் - மாலை 06.31 pm வரை மூலம் பிறகு - பூராடம்

யோகம்- காலை 06.03 AM வரை மரண யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 10.45 AM - 11.45 AM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 0730 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.12 PM.

சந்திராஷ்டமம் - மாலை 06.31 pm வரை கிருத்திகை பிறகு ரோகிணி

இன்றைய (12-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

ஆன்மிக செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : ஆர்வம் ஏற்படும்.

பரணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

புத்திரர்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். உயர்நிலை கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.

ரோகிணி : விவேகம் வேண்டும்.

மிருகசீரிஷம் : பொறுமையுடன் இருக்கவும்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : நம்பிக்கைகள் மேம்படும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் அமையும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

பூசம் : முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் : தெளிவுகள் பிறக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : இலக்குகள் பிறக்கும்.

பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரம் : மந்தமான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய்வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் : குழப்பம் நீங்கும்.

சித்திரை : அனுசரித்துச் செயல்படவும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : தெளிவுகள் பிறக்கும்.

விசாகம் : மேன்மையான நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். முகத்தில் புதுவித பொலிவுடன் காணப்படுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அறிவு வெளிப்படும்.

அனுஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கேட்டை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

வியாபாரத்தில் இடமாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.

பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளி உலக அனுபவம் மூலம் மாற்றம் ஏற்படும். சேவை பணிகளில் புதிய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். வர்த்தகப் பணிகளில் பொறுமை வேண்டும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : தாமதம் உண்டாகும்.

திருவோணம் : ஆதரவுகள் கிடைக்கும்.

அவிட்டம் : பொறுமை வேண்டும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முதலீடுகள் மேம்படும்.

சதயம் : வரவுகள் கிடைக்கும்.

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 12, 2024

கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.

ரேவதி : சிக்கல்கள் குறையும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!