Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அக்டோபர் 09, 2024 புதன்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 23

09.10-2024 புதன் கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வருஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- சுக்லபக்ஷம்

திதி - காலை 08.20 am வரை ஷஷ்டி திதி பிறகு -ஸப்தமி திதி

நக்ஷத்திரம் - 01.35 am வரை கேட்டை பிறகு -மூலம்

யோகம்- அதிகாலை 01.35 am வரை சித்தயோகம் காலை 06.02 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 11.30 AM - 12.00 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 01.45 AM -02.45 AM, 06.30 PM - 07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.53 PM.

சந்திராஷ்ட்டமம் - அதிகாலை 01.35 am வரை பரணி பிறகு-கிருத்திகை

இன்றைய (09-10-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் அதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : மாற்றமான நாள்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பும், பணிகளும் அதிகரிக்கும். வியாபார பயணங்களில் வீண் அலைச்சல்களும், விரயமும் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : பேச்சுக்களை தவிர்க்கவும்.

ரோகிணி : தடுமாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.

மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.

புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.

கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஈடேறும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூசம் : தடைகள் விலகும்.

ஆயில்யம் : போட்டிகள் குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பயணங்கள் அதிகரிக்கும்.

பூரம் : அறிமுகம் ஏற்படும்.

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : புரிதல்கள் ஏற்படும்.

அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

பணிகளில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். திறமைக்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். சோதனை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : வாய்ப்புகள் பிறக்கும்.

விசாகம் : அலைச்சல்கள் மேம்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அனுஷம் : சோர்வுகள் விலகும்.

கேட்டை : அனுபவம் வெளிப்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

திடீர் சுப செய்திகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபமின்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தகப் பணிகளில் நிதானம் வேண்டும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவு வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : கனிவு வேண்டும்.

திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சுபகாரியங்களை முன்நின்று செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : ஆதரவுகள் மேம்படும்.

சதயம் : தன்னம்பிக்கை ஏற்படும்.

பூரட்டாதி : சோர்வுகள் நீங்கும்.

மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 9, 2024

மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : லாபகரமான நாள்.

உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

ரேவதி : ஆதரவான நாள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!