Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

அக்டோபர் 05, 2024 சனிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 19

05.10-2024 சனிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது -வருஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- சுக்லபக்ஷம்

திதி -அதிகாலை 04.33 am வரை துவிதியை திதி பிறகு -திருதியை திதி

நக்ஷத்திரம் - இரவு 09.06 pm வரை சுவாதி பிறகு விசாகம்

யோகம்- சித்த யோகம் காலை 06.01am வரை அமிர்த யோகம் இரவு 09.06 pm வரை

பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM -11.45 AM, 09.30 PM - 10.30 PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM .

எமகண்டம் - 01.30 PM- 03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.55 PM.

சந்திராஷ்டமம் - மாலை 09.06 pm வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி

இன்றைய (05-10-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் நட்பு வட்டாரம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆதரவான நாள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் லாபம் ஏற்படும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : முக்கியத்துவம் அதிகரிக்கும்.

ரோகிணி : மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.

மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை : புரிதல் அதிகரிக்கும்.

புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.

கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

ஆயில்யம் : தீர்வுகள் கிடைக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். போட்டி மனப்பான்மையை குறைத்துக்கொள்வது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

பூரம் : இன்னல்கள் குறையும்.

உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

உத்திரம் : சோர்வுகள் குறையும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

சில பணிகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிலும் தாழ்ந்த மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.

சுவாதி : கவனம் வேண்டும்.

விசாகம் : பொறுமையுடன் இருக்கவும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். இலக்குகளில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் புரிதல் இன்மை ஏற்படும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

அனுஷம் : மாற்றம் ஏற்படும்.

கேட்டை : கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆசிகள் கிடைக்கும்.

பூராடம் : மேன்மை ஏற்படும்.

உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வாகன வசதிகள் மேம்படும். செலவுகளை குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : அதிகாரம் மேம்படும்.

திருவோணம் : வசதிகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வாகன பழுதுகளால் தாமதம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும்.

சதயம் : தாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.

மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 5, 2024

மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதி அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூகப் பணிகளில் அலைச்சல் மேம்படும்.நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : போட்டிகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

ரேவதி : அலைச்சல் மேம்படும்.

Tags

Next Story