Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அக்டோபர் 17, 2024 வியாழக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 31

17.10-2024 வியாழக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் -தக்ஷிணாயணம் .

ருது - வருஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- சுக்லபக்ஷம்

திதி - மாலை 05.25 pm வரை பௌர்ணமி திதி பிறகு பிரதமை திதி

நக்ஷத்திரம் - மாலை 05.36 PM வரை ரேவதி பிறகு அஸ்வினி

யோகம்- மரண யோகம் காலை 06.01am வரை மாலை 05.25 pm வரை சித்த யோகம் பிறகு -அமிர்த யோகம்

நல்ல நேரம் - 10.45 AM - 11.45 AM

கௌரி நல்ல நேரம் 12.15 AM - 01.15 AM, 06.30 PM - 07.30 PM

ராகு காலம் - 01 .30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். -காலை 05.59 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.49 PM.

சந்திராஷ்டமம் - மாலை 05.36 PM வரை பூரம் பிறகு-உத்திரம்

இன்றைய (17-10-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். பணிபுரியும் இடத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.

கிருத்திகை : கட்டுப்பாடுகள் குறையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

கல்விப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மருத்துவ சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வமின்மை குறையும்.

திருவாதிரை : இன்னல்கள் விலகும்.

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : தேடல்கள் ஏற்படும்.

பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

ஆயில்யம் : அலைச்சல் ஏற்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை தரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மகம் : பிரச்சனைகள் மறையும்.

பூரம் : வரவுகள் உண்டாகும்

உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் ஆதாயமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அறப்பணிகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : மேன்மை ஏற்படும்.

சித்திரை : உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடலளவில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : தீர்வுகள் பிறக்கும்.

விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

அனுஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மூலம் : ஆதாயம் உண்டாகும்.

பூராடம் : அறிமுகங்கள் ஏற்படும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.

திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வஞ்சகமான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களை வழிநடத்தி செல்லும் திறமை வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.

சதயம் : வரவுகள் கிடைக்கும்.

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 17, 2024

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

ரேவதி : புரிதல்கள் அதிகரிக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!