Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

அக்டோபர் 11, 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 25

11.10-2024 வெள்ளிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வருஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- சுக்லபக்ஷம்

திதி - காலை 07.22 am வரை அஷ்டமி திதி பிறகு நவமி திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 02.09 am வரை பூராடம் பிறகு உத்திராடம்

யோகம்- நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 12.15 AM - 01.15 AM, 04.30 PM - 05.30 PM

கௌரி நல்ல நேரம் 01.45 AM -02.45 AM, 06.30 PM - 07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM .

எமகண்டம் - 03.00 PM- 04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சூரிய உதயம். - காலை 05.59 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.52 PM.

சந்திராஷ்டமம் - அதிகாலை 02.09 am வரை ரோகிணி பிறகு மிருகஷிரிஷம்

இன்றைய (11-10-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளிடம் கனிவு வேண்டும். அறப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு புது உற்சாகத்தைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : கனிவு வேண்டும்.

பரணி : தடைகள் விலகும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரோகிணி : தேடல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சாதகமற்ற நாள்.

திருவாதிரை : நெருக்கடிகள் உண்டாகும்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களுடன் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.

பூசம் : முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் : புரிதல் மேம்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுப்பூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : முயற்சிகள் ஈடேறும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : வாதங்களை குறைக்கவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சித்திரை : அனுபவங்கள் மேம்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : அனுபவம் கிடைக்கும்.

விசாகம் : செலவுகளை தவிர்க்கவும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

விசாகம் : லாபம் கிடைக்கும்.

அனுஷம் : முடிவுகள் கிடைக்கும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அரசு சார்ந்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : புரிதல் உண்டாகும்.

பூராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : சோர்வு ஏற்படும்.

அவிட்டம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.

சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 11, 2024

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : காரியங்கள் கைகூடும்.

உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.

ரேவதி : முன்னேற்றமான நாள்.

Tags

Next Story