Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 4, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

அக்டோபர் 04, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 17 புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சஞ்சரிக்கிறார். கன்னி, துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரங்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

இன்று நல்ல விஷயங்கள் காத்திருக்கிறது. அலுவலகம் சார்ந்த விஷயங்களில் இருந்த அலைச்சல்கள், குழப்பங்கள் தீரும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியும், தெளிவும் இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் நிகழ்வதால், உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். உடல் நலக் குறைகள் தீரும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நன்மையை தரலாம். புது வரவுகள் மூலம் கிடைக்கக்கூடிய சில விஷயங்கள் மகிழ்சியை இரட்டிப்பாகும். குடும்பத்தில் நிகழும் சுப விஷயங்கள் மன மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

இன்று தனலாபங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத புதிய நட்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், புதிய ஆலோசனைகள் கிடைத்து மன அமைதியும், ஏமாற்றங்கள் இல்லாத நாளாகவும் அமையும்.

கடகம்

இன்று சந்திரன் உச்சம் பெற்றிருப்பது உங்களுக்கு பலவிதத்தில் நன்மையை தரும். வழக்கு, விசாரணைகளில் வெற்றிகள் உண்டு. இன்று முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யலாம். குழந்தைகள் இல்லாத தம்பதியினர் இன்று சஷ்டியை விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். சிறு சிறு குடும்ப சண்டைகள் தீரும். மன அமைதி, ஆரோக்கியம் மேம்படும். கடன் தொல்லைகள், பண விவகாரங்கள், கொடுக்கல் வாங்கலில் மன அமைதி ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் நன்மையை தரும்.

கன்னி

இன்று ஆரோக்கியமான நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலருக்கு உடல் தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

துலாம்

இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. குறிப்பாக சித்திரை, சுவாதி நட்சத்திரம் காரர்களுக்கு எடுத்த காரியத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதும். இனிய காரியங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும்.

விருச்சிகம்

இன்று சந்திரன் ஏழாம் இடத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். அமோகமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

தனுசு

இன்று நாளும் முழுவதும் மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். புதிய வேலைக்கான விண்ணப்பம் செய்வதில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

இன்று ஆரோக்கியம் மேம்படும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு மேன்மையை அளிக்கும். மனதில் இருக்கும் அழுத்தங்கள், மன பய உணர்வுகள் நீங்கும். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்கள் எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். வாகனம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கக்கூடும்

கும்பம்

பழைய சச்சரவுகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அலுவலகத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று சில ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இன்று மாணவர்களுக்கு உயர்கல்வியில் வரும் தடைகளை சமாளிக்க ஆலோசனை தேவைப்படும்.

மீனம்

நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயம் நடந்து மனதில் மகிழ்ச்சியைத் தரும். தாயின் உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் வரும். சில முதலீடு செய்தால், எதிர்காலத்தில் அதன் முழு பலனையும் பெறலாம். மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது