Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 24, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். பணவரத்து இருக்கும்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்:

எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

கடகம்:

மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம்.

சிம்மம்:

வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கன்னி:

எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சிலும், செயலிலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

துலாம்:

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சின் இனிமை மூலம் சாதகமான பலன் பெறுவீர்கள். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது..

விருச்சிகம்:

மனதைரியம் கூடும் திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை.புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.

தனுசு:

எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக செயல்படுவீர்கள். பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மகரம்:

சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

கும்பம்:

புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். பணிசுமை குறைந்து மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.. மனபலம் கூடும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!