Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 18, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும்கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். தம்பதிகளுக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்குவது நன்மை தரும்.

மிதுனம்:

மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்:

மற்றவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.

சிம்மம்:

நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவீர்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி:

மனதைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

துலாம்:

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வேலையை முடிக்க அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்:

எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும்.

தனுசு:

பணியில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும், கவனம் தேவை.

மகரம்:

வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது. சக ஊழியர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்..

கும்பம்:

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்..

மீனம்:

எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான நிலை நீங்கி வேகம் பிடிக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!