Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 11, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ரிஷபம்:

காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். ம். வீண்பயம் ஏற்படும். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

மிதுனம்:

சிலருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை வரலாம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் இருக்கக்கூடும்.

கடகம்:

நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தம்பதிகளுக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தேவையற்ற வீண் கவலை உண்டாகும். கடன் விஷயங்களில் கவனம் தேவை.

சிம்மம்:

சாதிக்கும் திறமை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். காரியங்களில் தாமதம் ஏற்படலாம். முன்னோர்கள் சொத்து விஷயங்களில் நல்ல முடிவுகள் வந்து சேரும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கன்னி:

எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்ய எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

துலாம்:

தைரியம் அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். பணம் அதிகம் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது.. வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். .

விருச்சிகம்:

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பும்போது கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். பணியில் இருப்பவர்கள் அலைச்சல் மற்றும் வேலை பளுவை சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

தனுசு:

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் அனுசரித்து செல்வதும் நல்லது.. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

மகரம்:

அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

கும்பம்:

வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடும். மனதில் நிம்மதி ஏற்படும். சிக்கலான காரியத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு ஓங்கும்.

மீனம்:

வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து நன்றாக இருக்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். மேலிடத்தில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!