Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 10, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பணியில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல நேரலாம்.

மிதுனம்:

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். தம்பதிகளுக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அண்டை வீட்டாருடன் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கடகம்:

பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்:

எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.. திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கன்னி:

தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். மனதில் தைரியம் உண்டாகும்.

துலாம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளுக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்:

பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனும் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும்.

தனுசு:

புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும்.

மகரம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

கும்பம்:

பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகை ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்:

திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். பணியிடத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது