Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 9, 202 வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்:

வீண் அலைச்சல் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு பிரச்னை வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

மிதுனம்:

வேலையின்றி இருப்பவர்கள் வேலை அமையும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஆலோசனை பெறவும்.

கடகம்:

புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.

சிம்மம்:

திருமணத்தடை நீங்கும். திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் கிடைக்கும். தந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு கூடும்.

கன்னி:

நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம்.

துலாம்:

அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. முயற்சி செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு:

இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

மகரம்:

சொத்துக்கள் சேர்க்கை இருக்கும். வேலையில் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். எண்ணம் ஈடேறும் பாராட்டுகள் குவியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும்.

கும்பம்:

எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படலாம்.

மீனம்:

சுபகாரியங்கள் கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். உயர்கல்விக்கான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!