Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 28, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

உங்கள் திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். பணி நிரந்தமாகும். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்:

சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். குழப்பங்கள் வந்தாலும் அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிகவும் சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். நிநிநிலை சீராகும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்:

தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.

சிம்மம்:

எதிலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். வீண் பேச்சுகளை குறையுங்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

கன்னி: விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதை செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யவும்.

துலாம்: போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்

விருச்சிகம்: பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

தனுசு:

உடன்பிரந்தாருடன் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் ஏற்படும் பிரச்சனைகளை உடன் வேலை செய்வோரின் ஆதரவால் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

மகரம்:

வேலையில் இருந்த பளு குறையும். சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.. புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கும்பம்:

எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும்.

மீனம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!