Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 25, 2023 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

ரிஷபம்:

செய்யாத தவறுக்கு உங்களை சிக்க வைக்க யாரேனும் முயற்சிப்பார்கள். கவனம் தேவை. எனினும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். உறவினர் வகையில் மனவருத்தம் உருவாகலாம். அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

மிதுனம்:

இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செலவுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

கடகம்:

தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.

சிம்மம்:

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும். சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி:

புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள்.

துலாம்:

கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

விருச்சிகம்:

சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பணவரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு:

குடும்பத்தில் நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டு செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.

மகரம்:

காரியங்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும்.

கும்பம்:

புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

மீனம்:

பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். விரும்பிய பாடம் கிடைக்காவிட்டால் கிடைத்த பாடத்தை விருப்பத்துடன் படியுங்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!