Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 21, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் தகுந்த வேலை பெறுவர்.

ரிஷபம்:

அரசு சார்ந்த விஷயங்களில் சலுகைகளை பெற முடியாமல் இருந்தாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம்.

மிதுனம்:

தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது. வாழ்க்கைத்துணையுடன் உறவு பிரகாசிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கடகம்:

பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்கக்கூடும். வேலை இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.

சிம்மம்:

சச்சரவுகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றி வாகை சூடலாம். உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

கன்னி:

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.

துலாம்:

உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்:

வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். காரிய வெற்றி மற்றும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும்.

தனுசு:

ஞாபக சக்தியை இழக்காமல் இருக்க மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த வேண்டாம். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம்.

மகரம்:

பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கும்பம்:

இடப்பெயர்ச்சி மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும்.

மீனம்:

பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதங்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமுடன் முயற்சிகள் எடுத்துப் படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். உங்களின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!