Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 20, 2023 திங்கள்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

ரிஷபம்:

தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். பிரச்சனையை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

மிதுனம்:

எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வாழ்க்கையில் மற்ற மனிதர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த ஒரு பிரச்சினை சுமூகமாக முடியும்.

கடகம்:

உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

சிம்மம்:

வியாபாரத்தில் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.

கன்னி:

நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும்.

துலாம்:

பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. வாகன பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும்.

விருச்சிகம்:

உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். கவனம் தேவை. உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும்.

தனுசு:

தெய்வ அனுகூலம் இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

மகரம்:

சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும்.

கும்பம்:

வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்ளவும்.

மீனம்:

பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. விவசாயிகளுக்கு பயிர்கள் லாபம் தரும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!