Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 17, 2023 வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை தீரும். செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். ஜாதகத்தில் தசாபுக்திகள் அனுகூலமாக இல்லாதிருந்தால் தவறான வழிமுறைகளில் செல்வம் கரைய வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

ரிஷபம்:

சிறுசரியான சமயத்தில் கடன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சிறுசிறு பிரச்னை வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

மிதுனம்:

பல நன்மைகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உடன்பிரந்தாருடன் இணக்கமாக இருப்பீர்கள். சந்தோஷமான நாளாக அமையும்.

கடகம்:

உங்களது மேலான யோசனைகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வர் வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.

சிம்மம்:

அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது.

கன்னி:

மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாக சிந்தித்து ஈடுபடவும்.

துலாம்:

பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும்.

விருச்சிகம்:

நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு:

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும்.

மகரம்:

வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும். கலைத்துறையை சார்ந்தவர்கள் சிறந்த நிலைக்கு வரலாம்.

கும்பம்:

உறவினர் வகையில் ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.

மீனம்:

புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!