Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 16, 2023 வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

ரிஷபம்:

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரும். வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரயம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும்.

மிதுனம்:

வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும்.

கடகம்:

யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதலீடு விஷயங்களில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

சிம்மம்:

பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு உங்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். இதனால் பொறுப்புகள் கூடும்.

கன்னி:

மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள்.

துலாம்:

நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள்.

விருச்சிகம்:

சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புகழ் தேடி வரும். அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு:

வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

மகரம்:

பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம்.

கும்பம்:

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம்.

மீனம்:

எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக திருப்பி தருவதற்கு தேவையான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!