Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
பைல் படம்.
மேஷம்:
உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி கிடைக்கும் எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.
ரிஷபம்:
உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
மிதுனம்:
உடன்பிறந்தாருடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நிலம், வீடு, வாகனம், ஆடை போன்றவைகள் வாங்கலாம். தாய், தாய் வழி உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும்.
கடகம்:
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
சிம்மம்:
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி:
வருமானம் நல்ல முறையில் இருக்கும். குறுக்கு வழியில் செல்ல மனம் விரும்பினாலும், மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
இளைய சகோதரர், சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.
தனுசு:
தந்தையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும்.
மகரம்:
மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதை உயரும்.
கும்பம்:
வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கை வளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சில பிரச்சனைகள் வரலாம்.
மீனம்:
இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டம். உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope 15 November 2023
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu