Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 11, 202 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்க்கவும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை பிரச்சனையின்றி வந்து சேரும். வாகனங்களில் போகும்போது கவனம் தேவை.

ரிஷபம்:

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத்தாமதமும் ஏற்படலாம்.

மிதுனம்:

உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

கடகம்:

சில விரயங்கள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவுகள் தான். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

சிம்மம்:

எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும்.

கன்னி:

நிதானமாக எந்த காரியத்தையும் செய்யவும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாமல் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக உதவி செய்ய வேண்டாம்.

துலாம்:

பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.

விருச்சிகம்:

தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு.

தனுசு:

பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம்.

மகரம்:

உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

கும்பம்:

மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.

மீனம்:

சொத்துகளில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!